எல்லாம் சிஷ்டித்த நமது / Ellam Sishtiththa Namadhu / Ellam Sishtitha Namadhu / Ellam Sishtiththa Namathu / Ellam Sishtitha Namathu

எல்லாம் சிஷ்டித்த நமது / Ellam Sishtiththa Namadhu / Ellam Sishtitha Namadhu / Ellam Sishtiththa Namathu / Ellam Sishtitha Namathu

1
எல்லாம் சிஷ்டித்த நமது 
தயாபர பிதாவுக்கு 
அநந்த காலமாக 
அல்லேலுயா மகத்துவம்
பலம் புகழ்ச்சி தோத்திரம் 
உண்டாய் இருப்பதாக
பார்ப்பார் காப்பார்
வல்லமையும் கிருபையும் 
அன்பும் எங்கும் 
அவர் செய்கையால் விளங்கும்

2
மண் நீசருக்கு மீட்பரும் 
கர்த்தாவுமாம் சுதனுக்கும் 
ரட்சிப்பின் அன்புக்காக
அல்லேலுயா புகழ்ச்சியும் 
அநந்த ராஜரீகமும் 
உண்டாய் இருப்பதாக
பாவம் சாபம் 
எந்தத் தீங்கும் அதால் நீங்கும்
என்றென்றைக்கும் 
பாக்கியம் எல்லாம் கிடைக்கும்

3
மனந்திருப்பி எங்களை 
பர்த்தாவாம் இயேசுவண்டையே 
அழைத்து நேர்த்தியாக 
சிங்காரிக்கும் தேவாவிக்கும்
அல்லேலுயா புகழ்ச்சியும் 
வணக்கமும் உண்டாக
வான ஞான 
வாழ்வினாலும் செல்வத்தாலும் 
தேற்றிவாறார்
அதின்முன் ருசியைத் தாறார்

4 எல்லா சிஷ்டிகளாலேயும் 
பிதா குமரன் ஆவிக்கும் 
அநந்த காலமாக
அல்லேலுயா மகத்துவம்
பலம் புகழ்ச்சி தோத்திரம் 
உண்டாய் இருப்பதாக
ஆமேன் ஆமேன்
நீர் அநந்தம் ஆதியந்தம்
பரிசுத்தம்
பரிசுத்தம் பரிசுத்தம்

ஆமேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!