தேவா இரக்கம் இல்லையோ / Devaa Irakkam Illaiyo / Deva Irakkam Illayo

தேவா இரக்கம் இல்லையோ / Devaa Irakkam Illaiyo / Deva Irakkam Illayo

தேவா இரக்கம் இல்லையோ இயேசு
தேவா இரக்கம் இல்லையோ

ஜீவா பரப்ரம ஏகோவா திரித்துவத்தின்
மூவாள் ஒன்றாக வந்த தாவீதின் மைந்தன் ஒரே

தேவா இரக்கம் இல்லையோ இயேசு
தேவா இரக்கம் இல்லையோ

1
எல்லாம் அறிந்த பொருளே எங்கள்
இல்லாமை நீக்கும் அருளே கொடும்
பொல்லா மனதுடைய கல்லான பாவிகளைக்
கொல்லாதருள் புரியும் நல்லாயன் யேசுநாதர்

தேவா இரக்கம் இல்லையோ இயேசு
தேவா இரக்கம் இல்லையோ

2
எங்கும் நிறைந்த ஜோதியே ஏழைப்
பங்கில் உறைந்த நீதியே எங்கள்
சங்கடமான பாவ சங்கதங்களை நீக்கும்
துங்க இசரவேலின் வங்கிஷ க்ரீடாபதி

தேவா இரக்கம் இல்லையோ இயேசு
தேவா இரக்கம் இல்லையோ

3
வேதாந்த வேத முடிவே ஜெக
ஆதாரம் ஆன வடிவே ஐயா
தாதாவும் எமைப் பெற்ற மாதாவும் நீயே யேசு
நாதா ரட்சியும் வேறே ஆதாரம் எமக்கில்லை

தேவா இரக்கம் இல்லையோ இயேசு
தேவா இரக்கம் இல்லையோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!