அன்பரின் நேசம் ஆர் சொல்லாகும் / Anbarin Nesam Aar Sollalaagum / Anparin Naesam Aar Sollalaakum
அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும் அதிசய
அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்
துன்ப அகோரம் தொடர்ந்திடும் நேரம் அதிசய
அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்
1
இதுவென் சரீரம் இதுவென்றன் ரத்தம்
என்னை நினைந்திடும்படி அருந்து மென்றாரே
அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும் அதிசய
அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்
2
பிரிந்திடும் வேளை நெருங்கினதாலே
வருந்தின சீஷர்க்காய் மறுகி நின்றாரே
அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும் அதிசய
அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்
3
வியாழனிரவினில் வியாகுலத்தோடே
விளம்பின போதகம் மறந்திடலாமோ
அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும் அதிசய
அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்
4
செடியும் கொடியும் போல் சேர்ந்து தம்மோடே
முடிவு பரியந்தம் நிலைப்பீரென்றாரே
அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும் அதிசய
அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்
5
பக்தர் கட்காகப் பரமனை நோக்கி
மெத்தவும் ஊக்கமாய் வேண்டிக் கொண்டாரே
அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும் அதிசய
அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்