அலையலையாய் அலையினூடே / Alaialaiyaai Alaiyinoode

அலையலையாய் அலையினூடே / Alaialaiyaai Alaiyinoode

அலையமலையாய் அலையினூடே
அல்லேலூயா பாடிடவா

1
அலைகடலில் மீன் பிடிப்போரே நீ
வலை கிழிய மீன் பிடிக்க வா
கலைகளெல்லாம் கைவிட்டதோ உன்
வலையை வலப்புறமே வீசவா

அலையமலையாய் அலையினூடே
அல்லேலூயா பாடிடவா

2
அலைகடலைக் கடந்து சென்றோரே நீ
வலைகளிலே சிக்கி விட்டாயோ
மலைதனிலே சிலுவையண்டை – பார்
விலைமதியா விடுதலையுண்டே

அலையமலையாய் அலையினூடே
அல்லேலூயா பாடிடவா

3
பல வழிகள் பார்த்து நிற்கும் நீ பார்
மலைகளிலே மாளும் மாந்தரை
அலையலையாய் மாந்தர் செல்கின்றார் உன்
வலையுடனே வேகமாக வா

அலையமலையாய் அலையினூடே
அல்லேலூயா பாடிடவா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!