ஆண்டவா உமக்கே ஸ்தோத்ரம் / Aandavaa Umakke Sthothram / Andava Umakke Sthothram / Aandavaa Umake Sthothram / Andava Umake Sthothram
1
ஆண்டவா உமக்கே ஸ்தோத்ரம்
அடியேனைக் காத்தீரே
மீண்டும் என்னை உமக்கேற்ற
சேவை செய்யக் கொள்வீரே
என் இதயம் மனம் செயல்
யாவும் உம்மைத் துதிக்கும்
ஆண்டவா உமக்கே ஸ்தோத்ரம்
அடியேனை ஆட்கொள்ளும்
2
இவ்வுலக வாழ்நாள் எல்லாம்
நான் உமக்காய் வாழவும்
அன்பு தியாகம் அருள் பக்தி
அனைத்தும் பெற்றோங்கவும்
பாவ அழுக்கெல்லாம் நீக்கி
தூய பாதை செல்லவும்
ஆண்டவா உம் அருள் தாரும்
அடியேனை ஆட்கொள்ளும்
3
வியாதி துக்கம் தொல்லை வந்தால்
உம்மை நோக்கிக் கெஞ்சுவேன்
உம் ப்ரசன்னம் எனக்கின்பம்
சாவுக்கும் நான் அஞ்சிடேன்
துன்பத்தில் என் நண்பர் நீரே
இன்பம் ஈபவர் நீரே
ஆண்டவா நீர்தாம் என் தஞ்சம்
அடியேனை ஆட்கொள்ளும்
4
மூவராம் திரியேகர்க்கென்றும்
மாட்சி மேன்மை மகிமை
விண்ணில் தூதர் தூயர் கூட்டம்
அவர் நாமம் துதிக்கும்
மண்ணில் மாந்தர் கூட்டம் யாவும்
அவர் பாதம் போற்றவும்
ஆண்டவா உம் அருள் தாரும்
அடியாரை ஆட்கொள்ளும்