ஆ சுந்தர வீடே / Aa Sundara Veede / Aa Sundara Veedae

ஆ சுந்தர வீடே / Aa Sundara Veede / Aa Sundara Veedae

ஆ சுந்தர வீடே என் சோபித வீடே
என்றும் ஆனந்தமாய் உம்மில் வாழ்ந்திடுவேன்
ஆ சுந்தர வீடே என் சோபித வீடே
என்றும் ஆனந்தமாய் உம்மில் வாழ்ந்திடுவேன்

1
மாமகிமையாம் மனோகரமாய்
தேவன் திருகை நிர்மாணித்ததாம்

நான் சேருவேனே சொர்காலயமே
நான் சேருவேனே சொர்காலயமே

ஆ சுந்தர வீடே என் சோபித வீடே
ஆ சுந்தர வீடே என் சோபித வீடே
என்றும் ஆனந்தமாய் உம்மில் வாழ்ந்திடுவேன்
என்றும் ஆனந்தமாய் உம்மில் வாழ்ந்திடுவேன்
2
மின்னுதே ஈராறு வாசல்களும்

விண்ணுலகில் நித்திய ஆலயத்தில்

ஆ சௌபாக்கியமே நான் வாழ்ந்திடுவேன்
ஆ சௌபாக்கியமே நான் வாழ்ந்திடுவேன்

ஆ சுந்தர வீடே என் சோபித வீடே
ஆ சுந்தர வீடே என் சோபித வீடே
என்றும் ஆனந்தமாய் உம்மில் வாழ்ந்திடுவேன்
என்றும் ஆனந்தமாய் உம்மில் வாழ்ந்திடுவேன்

3
சீர் எழும் பொன்திரு வீதிகளால்

பேர் பெறும் சுந்தர வீடதையே
இதோ தூரத்திலே அதைக்காண்கிறேன் நான்

இதோ தூரத்திலே அதைக்காண்கிறேன் நான்

ஆ சுந்தர வீடே என் சோபித வீடே
ஆ சுந்தர வீடே என் சோபித வீடே
என்றும் ஆனந்தமாய் உம்மில் வாழ்ந்திடுவேன்
என்றும் ஆனந்தமாய் உம்மில் வாழ்ந்திடுவேன்

4
குரோதனம் வேதனை ஏதுமில்லை

இராப்பகல் வேற்றுமை அங்கேயில்லை

தேவாட்டுக்குட்டி தீபமாகிடுவார்
தேவாட்டுக்குட்டி தீபமாகிடுவார்

ஆ சுந்தர வீடே என் சோபித வீடே
ஆ சுந்தர வீடே என் சோபித வீடே
என்றும் ஆனந்தமாய் உம்மில் வாழ்ந்திடுவேன்
என்றும் ஆனந்தமாய் உம்மில் வாழ்ந்திடுவேன்

5
கூடுதே இரத்தசாட்சி சங்கம்

பிதாவின் முன்னில் சர்வ சித்தருமாய்

ஆத்ம நேசர் கண்ணீர்தாம் துடைப்பார்
ஆத்ம நேசர் கண்ணீர்தாம் துடைப்பார்

ஆ சுந்தர வீடே என் சோபித வீடே
ஆ சுந்தர வீடே என் சோபித வீடே
என்றும் ஆனந்தமாய் உம்மில் வாழ்ந்திடுவேன்
என்றும் ஆனந்தமாய் உம்மில் வாழ்ந்திடுவேன்

6
தூதர் அல்லேலுயா பாடிடுவார்

தூதர் பொன் வீணைகள் மீட்டிடுவார்

ஆ கீத நாதம் இதோ கேட்கிறதே
ஆ கீத நாதம் இதோ கேட்கிறதே

ஆ சுந்தர வீடே என் சோபித வீடே
ஆ சுந்தர வீடே என் சோபித வீடே
என்றும் ஆனந்தமாய் உம்மில் வாழ்ந்திடுவேன்
என்றும் ஆனந்தமாய் உம்மில் வாழ்ந்திடுவேன்

7
பாவ சரீரமும் மாறிடுமே

இராஜன் இயேசுவை காண்பதற்காய்

நான் போவதாலே என்ன ஆனந்தமே
நான் போவதாலே என்ன ஆனந்தமே

ஆ சுந்தர வீடே என் சோபித வீடே
ஆ சுந்தர வீடே என் சோபித வீடே
என்றும் ஆனந்தமாய் உம்மில் வாழ்ந்திடுவேன்
என்றும் ஆனந்தமாய் உம்மில் வாழ்ந்திடுவேன்

ஆ சுந்தர வீடே / Aa Sundara Veede / Aa Sundara Veedae

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!