ஆ அம்பர உம்பர / Aa Ambara Umbara / Ah Ambara Umbara
ஆ அம்பர உம்பர மும் புகழுந்திரு
ஆதிபன் பிறந்தார்
ஆ அம்பர உம்பர மும் புகழுந்திரு
ஆதிபன் பிறந்தார்
ஆதிபன் பிறந்தார் அமலாதிபன் பிறந்தார்
ஆதிபன் பிறந்தார் அமலாதிபன் பிறந்தார்
ஆ அம்பர உம்பர மும் புகழுந்திரு
ஆதிபன் பிறந்தார்
ஆ அம்பர உம்பர மும் புகழுந்திரு
ஆதிபன் பிறந்தார்
1
அன்பான பரனே அருள் மேவுங் காரணனே
அன்பான பரனே அருள் மேவுங் காரணனே
நவ அச்சய சச்சிதா ரட்சகனாகிய
உச்சிதவரனே
நவ அச்சய சச்சிதா ரட்சகனாகிய
உச்சிதவரனே
ஆ அம்பர உம்பர மும் புகழுந்திரு
ஆதிபன் பிறந்தார்
2
ஆதம் பவமற நீதம் நிறைவேற
ஆதம் பவமற நீதம் நிறைவேற
அன்று அல்லிராவினில் வெல்லையடியினில்
புல்லணையிற் பிறந்தார்
அன்று அல்லிராவினில் வெல்லையடியினில்
புல்லணையிற் பிறந்தார்
ஆ அம்பர உம்பர மும் புகழுந்திரு
ஆதிபன் பிறந்தார்
3
ஞானியர் தேட வானவர் பாட
ஞானியர் தேட வானவர் பாட
மிக நன்னய உன்னத பன்னரு மேசையா
இந்நிலம் பிறந்தார்
மிக நன்னய உன்னத பன்னரு மேசையா
இந்நிலம் பிறந்தார்
ஆ அம்பர உம்பர மும் புகழுந்திரு
ஆதிபன் பிறந்தார்
4
கோனவர் நாட தானவர் கொண்டாட
கோனவர் நாட தானவர் கொண்டாட
என்று கோத்திரர் தோத்திரஞ் சாற்றிடவே
யூத
கோத்திரன் பிறந்தார்
என்று கோத்திரர் தோத்திரஞ் சாற்றிடவே
யூத
கோத்திரன் பிறந்தார்
ஆ அம்பர உம்பர மும் புகழுந்திரு
ஆதிபன் பிறந்தார்
5
விண்ணுடு தோண மன்னவர் பேண
விண்ணுடு தோண மன்னவர் பேண
ஏரோது மைந்தனின் சிந்தையழுந்திக் கலங்கிட
விந்தையாய்ப் பிறந்தார்
ஏரோது மைந்தனின் சிந்தையழுந்திக் கலங்கிட
விந்தையாய்ப் பிறந்தார்
ஆ அம்பர உம்பர மும் புகழுந்திரு
ஆதிபன் பிறந்தார்
ஆ அம்பர உம்பர மும் புகழுந்திரு
ஆதிபன் பிறந்தார்
ஆ அம்பர உம்பர / Aa Ambara Umbara / Ah Ambara Umbara | Hema John | Richard Vijay
ஆ அம்பர உம்பர / Aa Ambara Umbara / Ah Ambara Umbara | R. Inu Johanna
ஆ அம்பர உம்பர / Aa Ambara Umbara / Ah Ambara Umbara | Kruthika | D.Mervin Suresh
ஆ அம்பர உம்பர / Aa Ambara Umbara / Ah Ambara Umbara
ஆ அம்பர உம்பர / Aa Ambara Umbara / Ah Ambara Umbara | Mission India Movement (MIM), Kodambakkam, Chennai, Tamil Nadu, India
ஆ அம்பர உம்பர / Aa Ambara Umbara / Ah Ambara Umbara | Octet Cantabile