தேன் இனிமையிலும் ஏசுவின் நாமம் / Thean Innimaiyilum Yesuvin Naamam / Then Inimaiyilum Yesuvin Naamam
தேன் இனிமையிலும் ஏசுவின் நாமம்
திவ்விய மதுரமாமே அதைத்
தேடியே நாடி ஓடியே வருவாய் தினமும் நீ மனமே
தேன் இனிமையிலும் ஏசுவின் நாமம்
திவ்விய மதுரமாமே
1
காசினிதனிலே நேசமதாகக்
கஷ்டத்தை உத்தரித்தே பாவக்
கசடதை அறுத்துச் சாபத்தைத் தொலைத்தார்
கண்டுனர் நீ மனமே
தேன் இனிமையிலும் ஏசுவின் நாமம்
திவ்விய மதுரமாமே அதைத்
தேடியே நாடி ஓடியே வருவாய் தினமும் நீ மனமே
தேன் இனிமையிலும் ஏசுவின் நாமம்
திவ்விய மதுரமாமே
2
பாவியை மீட்கத் தாவியே உயிரைத்
தாமே ஈந்தவராம் பின்னும்
நேமியாம் கருணை நிலைவரமுண்டு
நிதம் துதி மனமே
தேன் இனிமையிலும் ஏசுவின் நாமம்
திவ்விய மதுரமாமே அதைத்
தேடியே நாடி ஓடியே வருவாய் தினமும் நீ மனமே
தேன் இனிமையிலும் ஏசுவின் நாமம்
திவ்விய மதுரமாமே
3
காலையில் பனிபோல் மாயமாய் யாவும்
உபாயமாய் நீங்கிவிடும் என்றும்
கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்பு
கருத்தாய் நீ மனமே
தேன் இனிமையிலும் ஏசுவின் நாமம்
திவ்விய மதுரமாமே அதைத்
தேடியே நாடி ஓடியே வருவாய் தினமும் நீ மனமே
தேன் இனிமையிலும் ஏசுவின் நாமம்
திவ்விய மதுரமாமே
4
துன்பத்தில் இன்பம் தொல்லையில் நல்ல
துணைவராம் நேசரிடம் நீயும்
அன்பதாய்ச் சேர்த்தால் அணைத்துனைக் காப்பார்
ஆசை கொள் நீ மனமே
தேன் இனிமையிலும் ஏசுவின் நாமம்
திவ்விய மதுரமாமே அதைத்
தேடியே நாடி ஓடியே வருவாய் தினமும் நீ மனமே
தேன் இனிமையிலும் ஏசுவின் நாமம்
திவ்விய மதுரமாமே
5
பூலோகத்தாரும் மேலோகத்தாரும்
புகழ்ந்து போற்று நாமம் அதைப்
பூண்டுகொண்டால்தான் பொன்னகர் வாழ்வில்
புகுவாய் நீ மனமே
தேன் இனிமையிலும் ஏசுவின் நாமம்
திவ்விய மதுரமாமே அதைத்
தேடியே நாடி ஓடியே வருவாய் தினமும் நீ மனமே
தேன் இனிமையிலும் ஏசுவின் நாமம்
திவ்விய மதுரமாமே
தேன் இனிமையிலும் ஏசுவின் நாமம் / Thean Innimaiyilum Yesuvin Naamam / Then Inimaiyilum Yesuvin Naamam | Sharon Merlena | D. Mervin Suresh