ஒரு மருந்தரும் குருமருந்து / Oru Marundharum Gurumarundhu / Oru Maruntharum Guru Marunthu

ஒரு மருந்தரும் குருமருந்து / Oru Marundharum Gurumarundhu / Oru Maruntharum Guru Marunthu

ஒரு மருந்தரும் குருமருந்து
உம்பரத்தில் நான் கண்டேனே

அருள் மருந்துடன் ஆனந்த மருந்து
ஆதியிற்றனாய் முளைத்த மருந்து
வரும் வினைகளை மாற்றும் மருந்து
வறுமையுள்ளோர்க்கே வாய்த்த மருந்து

ஒரு மருந்தரும் குருமருந்து
உம்பரத்தில் நான் கண்டேனே

1 
சிங்கார வனத்தில் செழித்த மருந்து
ஜீவதரு மீதில் படர்ந்த மருந்து
அங்குவிளை பவம் மாற்றும் மருந்து
வல்ல சர்ப்ப விஷம் மாய்த்த மருந்து

ஒரு மருந்தரும் குருமருந்து
உம்பரத்தில் நான் கண்டேனே

2
மோசே முதல் முன்னோர் காணா மருந்து
மோட்ச மகிமையைக் காட்டும் மருந்து
தேசத்தோர் பிணியைத் தீர்த்த மருந்து
தீர்க்கதரிசிகள் செப்பிய மருந்து

ஒரு மருந்தரும் குருமருந்து
உம்பரத்தில் நான் கண்டேனே

3
தீராத குஷ்டத்தைத் தீர்த்த மருந்து
செவிடு குருடூமை தின்ற மருந்து
மானா திருத்துவ மான மருந்து
மனுவாய் உலகினில் வந்த மருந்து

ஒரு மருந்தரும் குருமருந்து
உம்பரத்தில் நான் கண்டேனே

4
செத்தோரை உயிரோ டெழுப்பும் மருந்து
ஜீவன் தவறா தருளும் மருந்து
பத்தரைச் சுத்திகரித்திடும் மருந்து
பரம வாழ்வினில் சேர்க்கும் மருந்து

ஒரு மருந்தரும் குருமருந்து
உம்பரத்தில் நான் கண்டேனே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!