இயேசு ஸ்வாமி சீமோன் யூதா / Yesu Swaami Seemon Yudhaa / Yesu Swami Seemon Yudha

இயேசு ஸ்வாமி சீமோன் யூதா / Yesu Swaami Seemon Yudhaa / Yesu Swami Seemon Yudha

1      
இயேசு ஸ்வாமி சீமோன் யூதா
என்னும் உம் அப்போஸ்தலர்
ஒன்று சேர்ந்து உமக்காக
உழைத்த சகோதரர்
தங்கள் வேலை ஓய்ந்த போது
வெற்றிக் கிரீடம் பெற்றனர்

2        
அவர்கள் உம் அருளாலே
நேசத்தோடு போதித்தார்
சபையில் முற்காலம் பல
அற்புதங்கள் காண்பித்தார்
மார்க்கக் கேடுண்டான வேளை
எச்சரித்துக் கண்டித்தார்

3        
சீமோன் யூதா போன்ற உந்தன்
பக்தர் பல்லோருடனும்
பளிங்காழி முன்னே நாங்கள்
உம்மைப் போற்றும் அளவும்
சாவுக்கும் அஞ்சாமல் உம்மை
பற்றி ஏவி அருளும்

4        
அற்புதங்கள் செய்யும் வல்ல
மா பிதாவே ஸ்தோத்திரம்
நீதி சத்தியமும் நிறைந்த
மாந்தர் வேந்தே ஸ்தோத்திரம்
தூய ஆவியே என்றைக்கும்
உமக்கெங்கள் ஸ்தோத்திரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!