விசுவாசியின் காதில் பட / Visuvaasiyin Kaathil Pada / Visuvasiyin Kathil Pada / Visuvaasiyin Kathil Pada / Visuvaasiyin Kaathil Pata

விசுவாசியின் காதில் பட / Visuvaasiyin Kaathil Pada / Visuvasiyin Kathil Pada / Visuvaasiyin Kathil Pada / Visuvaasiyin Kaathil Pata

விசுவாசியின் காதில் பட இயேசுவென்ற நாமம்
விருப்பாயவர் செவியில் தொனி இனிப்பாகுது பாசம்

1
பசித்த ஆத்துமாவைப் பசியாற்று மன்னாவதுவே
முசிப்பாறுதல் இளைத்தோர்க்கெல்லாம் முற்றும் அந்தப் பெயரே

விசுவாசியின் காதில் பட இயேசுவென்ற நாமம்
விருப்பாயவர் செவியில் தொனி இனிப்பாகுது பாசம்

2
துயரையது நீக்கி காயமாற்றிக் குணப்படுத்தும்
பயங்கள் யாவும் இயேசுவென்றால் பறந்தோடியே போகும்

விசுவாசியின் காதில் பட இயேசுவென்ற நாமம்
விருப்பாயவர் செவியில் தொனி இனிப்பாகுது பாசம்

3
காயப்பட்ட இருதயத்தைக் கழுவிச் சுத்தப்படுத்தும்
மாயைகொண்ட நெஞ்சையது மயக்கமின்றிவிடுக்கும்

விசுவாசியின் காதில் பட இயேசுவென்ற நாமம்
விருப்பாயவர் செவியில் தொனி இனிப்பாகுது பாசம்

4
எல்லை இல்லாக் கிருபைத்திரள் ஏற்றுநிறைந்திருக்கும்
எல்லா நாளும் மாறாச்செல்வம் இயேசுவென்ற பெயரே

விசுவாசியின் காதில் பட இயேசுவென்ற நாமம்
விருப்பாயவர் செவியில் தொனி இனிப்பாகுது பாசம்

5
என்னாண்டவா என் ஜீவனே என் மார்க்கமே முடிவே
என்னால் வருந்துதியை நீரே ஏற்றுக்கொள்ளும் தேவே

விசுவாசியின் காதில் பட இயேசுவென்ற நாமம்
விருப்பாயவர் செவியில் தொனி இனிப்பாகுது பாசம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!