ஏழையின் குடிலில் / Yezhaiyin Kudilil / Yelaiyin Kudilil
ஏழையின் குடிலில்
ஏழ்மையின் வடிவில்
எழுந்திட்ட பாலனே வாராயோ
நெஞ்சமே உனது
மஞ்சமாய் நினைந்து
எழுந்திட்ட தேவனே வாராயோ
உணவாய் வாராயோ
உயிராய் வாராயோ
உணர்வாய் வாராயோ
உறவாய் வாராயோ
உறவாய் வாராயோ
ஏழையின் குடிலில்
ஏழ்மையின் வடிவில்
எழுந்திட்ட பாலனே வாராயோ
1
தன்னை தரும் அன்பே
உயர் பண்பு என்று
உன்னை தர வந்தாய் என் தேவனே
ஜீவன் தரும் வார்த்தை
வாழ்வாக வந்து
பாவம் தனை வென்றாய் என் தேவனே
தன்னை தரும் அன்பே
உயர் பண்பு என்று
உன்னை தர வந்தாய் என் தேவனே
ஜீவன் தரும் வார்த்தை
வாழ்வாக வந்து
பாவம் தனை வென்றாய் என் தேவனே
உணவின் வடிவில் இறைவனே
உறவினில் மலருதே
உனது வரவில் தேவனே நிதம்
உலகமே மகிழுதே
ஏழையின் குடிலில்
ஏழ்மையின் வடிவில்
எழுந்திட்ட பாலனே வாராயோ
2
விண்ணின் மணி ஒன்று
விருந்தென்று கண்டு
உன்னை பெற வந்தேன் என்தேவனே
பாரில் கரை சேர்க்கும்
மீட்பாக வந்து
பாசம் தனை தந்தாய் என் ஆயனே
விண்ணின் மணி ஒன்று
விருந்தென்று கண்டு
உன்னை பெற வந்தேன் என்தேவனே
பாரில் கரை சேர்க்கும்
மீட்பாக வந்து
பாசம் தனை தந்தாய் என் ஆயனே
புதுமை புரிந்திடும் இறைவனே புவி
மறுமையை அடையவே
அமைதி நிலவிட வேண்டுமே எமை
அழைத்திடும் தலைவனே
ஏழையின் குடிலில்
ஏழ்மையின் வடிவில்
எழுந்திட்ட பாலனே வாராயோ
நெஞ்சமே உனது
மஞ்சமாய் நினைந்து
எழுந்திட்ட தேவனே வாராயோ
உணவாய் வாராயோ
உயிராய் வாராயோ
உணர்வாய் வாராயோ
உறவாய் வாராயோ
உறவாய் வாராயோ
ஏழையின் குடிலில்
ஏழ்மையின் வடிவில்
எழுந்திட்ட பாலனே வாராயோ
ஏழையின் குடிலில் / Yezhaiyin Kudilil / Yelaiyin Kudilil