விண் போகும் பாதை தூரமாம் / Vin Pogum Paadhai Dhooramaam / Vin Pogum Paathai Dhooramaam / Vin Pogum Paadhai Dhooramam / Vin Pogum Paathai Dhooramam

விண் போகும் பாதை தூரமாம் / Vin Pogum Paadhai Dhooramaam / Vin Pogum Paathai Dhooramaam / Vin Pogum Paadhai Dhooramam / Vin Pogum Paathai Dhooramam

1
விண் போகும் பாதை தூரமாம்
என்றே நாம் எண்ணுவோம்
பகைஞரின் கொடூரமாம்
வன்மையை உணர்வோம்

2
ஆனால் எப்பாடும் பாவமும்
இல்லா அவ்விண்ணையே
நாம் கண்டிலோம் நாம் காணவும்
இம்மையில் கூடாதே

3
சிற்றின்பத்தை வெறுத்தலும்
உள்ளத்தை முற்றும் நாம்
கர்த்தாவுக் கொப்புவித்தலும்
அரிதென் றெண்ணலாம்

4
ஆனாலோ பாவம் நீக்கிட
அகோர வேதனை
மீட்பர் அடைந்து மாண்டதும்
நாம் காணக்கூடாதே

5
பக்தன் தோமாவே உன் போலும்
கண்ணால் காணாமலே
விஸ்வாசம் தக்கதாயினும்
சந்தேகம் கொள்வோமே

6
என்றாலும் ‘காணாதிருந்தும்
விஸ்வாசித்தோர் பாக்கியர்’
என்றே நீ பெற்ற வாக்கையும்
நாங்களும் சார்ந்தவர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!