வழியென்றால் எது / Vazhiendraal Edhu / Vazhiyenral Ethu / Vazhiendral Ethu
1
வழியென்றால் எது அது ஜீவ வழி
வழி காட்டிட வந்தவர் யார் அவர் இயேசு
வழியும் அவர் ஒளியும் அவர் ஜீவ நதியும் அவரே
சத்தியமும் அவர் நித்தியமும் அவர்
ஜீவ அப்பமும் அவரே
2
ஒளியென்றால் எது அது ஜீவ ஒளி
ஒளி காட்டிடும் உத்தமர் யார் அவர் இயேசு
வழியும் அவர் ஒளியும் அவர் ஜீவ நதியும் அவரே
சத்தியமும் அவர் நித்தியமும் அவர்
ஜீவ அப்பமும் அவரே
3
ஜலம் என்றால் எது அது ஜீவ ஜலம்
ஜலம் காட்டும் சற்குருயார் அவர் இயேசு
வழியும் அவர் ஒளியும் அவர் ஜீவ நதியும் அவரே
சத்தியமும் அவர் நித்தியமும் அவர்
ஜீவ அப்பமும் அவரே
4
சத்தியம் என்றால் எது அது தேவ சத்தியம்
சத்தியம் காட்டிடும் சற்குணன் யார் அவர் இயேசு
வழியும் அவர் ஒளியும் அவர் ஜீவ நதியும் அவரே
சத்தியமும் அவர் நித்தியமும் அவர்
ஜீவ அப்பமும் அவரே
5
அப்பம் என்றால் எது அது ஜீவ அப்பம்
அப்பம் ஊட்டிடும் அன்னையும் யார் அவர் இயேசு
வழியும் அவர் ஒளியும் அவர் ஜீவ நதியும் அவரே
சத்தியமும் அவர் நித்தியமும் அவர்
ஜீவ அப்பமும் அவரே