வானம் பூமி யாவற்றிலும் / நான் நம்புவேன் நான் நம்புவேன் | Vaanam Boomi Yaavatrilum / Vaanam Bhoomi Yaavatrilum / Naan Nambuven Naan Nambuven

வானம் பூமி யாவற்றிலும் / நான் நம்புவேன் நான் நம்புவேன் | Vaanam Boomi Yaavatrilum / Vaanam Bhoomi Yaavatrilum / Naan Nambuven Naan Nambuven

1
வானம் பூமி யாவற்றிலும்
இயேசு மேலானவர்
மனிதர் தூதர் பேய்தானும்
அவர் முன் வீழுவர்

நான் நம்புவேன் நான் நம்புவேன்
இயேசு எனக்காய் மரித்தார்
பாவம் நீங்கச் சிலுவையில்
உதிரம் சிந்தினார்

2
இரட்சகர் உயிர் விட்டதும்
எந்தனுக்காகவே
வெறெந்த மாமன் றாட்டுக்கும்
அங்கிட மில்லையே

நான் நம்புவேன் நான் நம்புவேன்
இயேசு எனக்காய் மரித்தார்
பாவம் நீங்கச் சிலுவையில்
உதிரம் சிந்தினார்

3
பாவத்தின் மாளும் யாவர்க்கும்
உயிரளிக்குமே
பெலனற்ற ஆத்மாவுக்கும்
சக்தி கொடுக்குமே

நான் நம்புவேன் நான் நம்புவேன்
இயேசு எனக்காய் மரித்தார்
பாவம் நீங்கச் சிலுவையில்
உதிரம் சிந்தினார்

4
லோகம் இவ்வன்பின் மாட்சிமை
ருசித்துப் பார்க்காதோ
மீட்ப ருதிர வல்லமை
வந்து சோதியாதோ

நான் நம்புவேன் நான் நம்புவேன்
இயேசு எனக்காய் மரித்தார்
பாவம் நீங்கச் சிலுவையில்
உதிரம் சிந்தினார்

5
என் மரணப் படுக்கையில்
யேசென்ற நாமத்தை
பிரஸ்தாபிக்கும் சந்தோஷத்தில்
அடைவேன் நித்திரை

நான் நம்புவேன் நான் நம்புவேன்
இயேசு எனக்காய் மரித்தார்
பாவம் நீங்கச் சிலுவையில்
உதிரம் சிந்தினார்

வானம் பூமி யாவற்றிலும் / நான் நம்புவேன் நான் நம்புவேன் | Vaanam Boomi Yaavatrilum / Vaanam Bhoomi Yaavatrilum / Naan Nambuven Naan Nambuven | Sharon

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!