உன்னதமான மா இராஜாவான / Unnadhamaana Maa Raajaavaana / Unnathamaana Maa Raajaavaana / Unnadhamana Maa Rajavana / Unnathamana Maa Rajaavana
1
உன்னதமான
மா இராஜாவான
சீர் சிறந்த இயேசுவே
உம்மில் களித்து
உம்மைத் துதித்து
நேசித்துக்கொண்டிருப்பேனே
2
பூ மலர் காடும்
பயிர் ஓங்கும் நாடும்
அந்தமும் சிறப்புமாம்
இயேசுவின் அந்தம்
எனக்கானந்தம்
என் மனதின் குளிர்ச்சியாம்
3
அண்டங்கள் யாவும்
சூரியன் நிலாவும்
அந்தமாய் பிரகாசிக்கும்
அவர் முன்பாக
மா ஜோதியாக
மினுங்கும் யாவும் மங்கிப்போம்
4
விண் மண்ணுடைய
மகிமை மறைய
அவர் அந்தமானவர்
வானத்திலேயும்
பூமியிலேயும்
நான் நாடினோர் என் ரட்சகர்