திரி முதல் கிருபாசனனே சரணம் / Thiri Mudhal Kirubaasanane Saranam / Thiri Mudhal Kirubasanane Saranam

திரி முதல் கிருபாசனனே சரணம் / Thiri Mudhal Kirubaasanane Saranam / Thiri Mudhal Kirubasanane Saranam

1
திரி முதல் கிருபாசனனே சரணம்
ஜெக தல ரட்சக தேவா சரணம்
தினம் அனுதினம் சரணம் கடாட்சி
தினம் அனுதினம் சரணம் சருவேசா

2
நலம் வளர் ஏக திரித்துவா சரணம்
நமஸ்கரி உம்பர்கள் நாதா சரணம்
நம்பினேன் இது தருணம் தருணம்
நம்பினேன் தினம் சரணம் சருவேசா

3
அருவுருவே அருளரசே சரணம்
அன்று மின்று மென்றும் உள்ளாய் சரணம்
அதிகுணனே தருணம் கிரணமொளிர்
அருள் வடிவே சரணம் சருவேசா

4
உலகிட மேவிய உனதா சரணம்
ஓர் கிருபாசன ஒளியே சரணம்
ஒளி அருள்வாய் தருணம் மனுவோர்க்-கு
உத்தமனே சரணம் சருவேசா

5
நித்திய தோத்திர நிமலா சரணம்
நிதி இஸ்ரவேலரின் அதிபதி சரணம்
நாதா இது தருணம் கிருபைக்கொரு
ஆதாரா சரணம் சருவேசா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!