தப்பு செஞ்சுட்டு / Thappu Senjuttu
தப்பு செஞ்சுட்டு சின்ன
தப்பு செஞ்சுட்டு பெரிய
தப்பு செஞ்சுட்டு சின்னப் பெரியச்சின்ன
தப்பு செஞ்சுட்டு தப்பிக்க நினைக்கும் தம்பி இங்க
தப்பி வரல ஒப்புக்கொடு இப்போ தம்பி பெரிய
தப்பு செஞ்சுட்டு தப்பிக்க நினைக்கும் தம்பி இங்க
தப்பி வரல ஒப்புக்கொடு இப்போ தம்பி
அப்பான்னு கூப்பிடு தம்பி இயேசுவ
அப்பான்னு கூப்பிடு தம்பி பாவம்
உப்பா மாறும் சிலுவையின்
இரத்தத்தில் கரைஞ்சு மறைஞ்சிடும் பாவம்
உப்பா மாறும் சிலுவையின்
இரத்தத்தில் கரைஞ்சு மறைஞ்சிடும்
தப்பு செஞ்சுட்டு தப்பிக்க நினைக்கும் தம்பி இங்க
தப்பி வரல ஒப்புக்கொடு இப்போ தம்பி பெரிய
தப்பு செஞ்சுட்டு தப்பிக்க நினைக்கும் தம்பி இங்க
தப்பி வரல ஒப்புக்கொடு இப்போ தம்பி
1.
போதை வஸ்துக்கள் தப்புத்தான்
மதுபானங்கள் தப்புத்தான்
களியாட்டங்கள் தப்புத்தான்
காம விகாரமும் தப்புத்தான்
பகை விரோதம் தப்புத்தான்
பில்லி சூனியமும் தப்புத்தான்
கொலை வெறியும் தப்புத்தான்
சிலை வழிபாடும் தப்புத்தான்
இந்த தப்பத்தான் இப்பத்தான்
விட்டுவிலகிடு தம்பி
இந்த தப்பத்தான் இப்பத்தான்
விட்டுவிலகிடு தம்பி
தப்பு செஞ்சுட்டு சின்ன
தப்பு செஞ்சுட்டு பெரிய
தப்பு செஞ்சுட்டு சின்னப் பெரியச்சின்ன
தப்பு செஞ்சுட்டு தப்பிக்க நினைக்கும் தம்பி இங்க
தப்பி வரல ஒப்புக்கொடு இப்போ தம்பி
2
பெருமை கொள்வது தப்புத்தான்
பொறாமை கொள்வதும் தப்புத்தான்
களவும் பொய்யும் தப்புத்தான்
மார்க்கபேதங்கள் தப்புத்தான்
லஞ்சம் வாங்குவதும் தப்புத்தான்
வட்டி வாங்குவதும் தப்புத்தான்
பழிவாங்குவதும் தப்புத்தான்
குழி பறிப்பதும் தப்புத்தான்
இந்த தப்பத்தான் இப்பத்தான்
விட்டுவிலகிடு தம்பி
இந்த தப்பத்தான் இப்பத்தான்
விட்டுவிலகிடு தம்பி
தப்பு செஞ்சுட்டு சின்ன
தப்பு செஞ்சுட்டு பெரிய
தப்பு செஞ்சுட்டு சின்னப் பெரியச்சின்ன
தப்பு செஞ்சுட்டு தப்பிக்க நினைக்கும் தம்பி இங்க
தப்பி வரல ஒப்புக்கொடு இப்போ தம்பி
3
சமாதானம் சரிதான்
அன்பு சந்தோஷம் சரிதான்
நீடிய பொறுமை சரிதான்
தயவு நற்குணம் சரிதான்
விசுவாசம் சரிதான்
இச்சையடக்கம் சரிதான்
மனத்தாழ்மை சரிதான்
துதியும் ஜெபமும் சரிதான்
இது சரிதான் இனிதான் இதை
கடைபிடிச்சுடு தம்பி
இது சரிதான் இனிதான் இதை
கடைபிடிச்சுடு தம்பி
தப்பு செஞ்சுட்டு சின்ன
தப்பு செஞ்சுட்டு சின்னப் பெரியச்சின்ன
தப்பு செஞ்சுட்டு தப்பிக்க நினைக்கும் தம்பி இங்க
தப்பி வரல ஒப்புக்கொடு இப்போ தம்பி
அப்பான்னு கூப்பிடு தம்பி இயேசுவ
அப்பான்னு கூப்பிடு தம்பி பாவம்
உப்பா மாறும் சிலுவையின்
இரத்தத்தில் கரைஞ்சு மறைஞ்சிடும் பாவம்
உப்பா மாறும் சிலுவையின்
இரத்தத்தில் கரைஞ்சு மறைஞ்சிடும்
தப்பு செஞ்சுட்டு சின்ன
தப்பு செஞ்சுட்டு சின்னப் பெரியச்சின்ன
தப்பு செஞ்சுட்டு தப்பிக்க நினைக்கும் தம்பி இங்க
தப்பி வரல ஒப்புக்கொடு இப்போ தம்பி
தப்பு செஞ்சுட்டு / Thappu Senjuttu | Moses Rajasekar | Edward Raj