சத்தாய் நிஷ்களமாயொரு சாமிய மும்மில தாய் / Saththaai Nishkalamaai Saamiya Mumila Thai / Sathai Nishkalamai Samiya Mumila Thai

சத்தாய் நிஷ்களமாயொரு சாமிய மும்மில தாய் / Saththaai Nishkalamaai Saamiya Mumila Thai / Sathai Nishkalamai Samiya Mumila Thai

1
சத்தாய் நிஷ்களமாயொரு சாமிய மும்மில தாய்ச்
சித்தாயானந்தமாய்த் திகழ்கின்ற திரித்துவமே
எத்தால் நாயடியேன் கடைத்தேறுவனென் பாவந்தீர்ந்து
அத்தாவுன்னை யல்லா லெனக்கார் துணை யாருறவே

2
எம்மாவிக்குருகி உயிரீந்து புரந்த தற்கோர்
கைமாறுண்டு கொலோ கடைகாறும் கையடையாய்
சும்மா ரஷணை செய் சொல் சுதந்தரம் யாதுமிலேன்
அம்மானுன்னையல்லா லெனக்கார் துணை யாருறவே

3
ஈண்டே யென்னுள்ளத்தில் விசுவாச விளக்கிலங்கத்
தூண்டா யென்னிலந்தோ மயல் சூழ்ந்து கெடுத்திடுங்காண்
மாண்டா யெம் பிழைக்காய் உயிர்த்தாயெமை வாழ்விக்கவே
ஆண்டா யுன்னை யல்லாலெனக்கார் துணை யாருறவே

4
மையார் கண்ணிருண்டு செவி வாயடைத்துக் குழறி
ஐயால் மூச்சொடுங்கி உயிராக்கை விட்டே கிடும்நாள்
நையேல் கை வெகிவேனுனை நாணுண் பஞ்சலென
ஐயா உன்னையல்லா லெனக்கார் துணை யாருறவே

5
திரைசேர் வெம்பவமாங் கடல் மூழ்கிய தீயரெமைக்
கரை சேர்த்துய்க்க வென்றே புணையாயினை கண்ணிலியான்
பரசேன் பற்றுகிலேனெனைப் பற்றிய பற்றுவிடாய்
அரசேயுன்னை யல்லாலெனக்கார் துணை யாருறவே

6
தாயே தந்தை தமர் குரு சம்பத்து நட்பெவையும்
நீயே எம் பெருமான் கதிவேறிலை நிண்ணயங்காண்
ஏயே வென்றி கழுமுலகோடெனக் கென்னுரிமை
ஆயேவுன்னை அல்லாலெனக் கார் துணை யாருறவே

சத்தாய் நிஷ்களமாயொரு சாமிய மும்மில தாய் / Saththaai Nishkalamaai Saamiya Mumila Thai / Sathai Nishkalamai Samiya Mumila Thai | Roshan Vincent, Keba Jeremiah, Aben Jotham, Sam K Jebaraja, John

சத்தாய் நிஷ்களமாயொரு சாமிய மும்மில தாய் / Saththaai Nishkalamaai Saamiya Mumila Thai / Sathai Nishkalamai Samiya Mumila Thai | Steffi Praveen

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!