சாலேமின் ராசா சங்கையின் ராசா / Saalemin Raasaa Sangaiyin Raasaa / Salemin Raja Sangeyin Raja
1
சாலேமின் ராசா சங்கையின் ராசா ஸ்வாமி வாருமேன் இந்தத்
தாரணிமீதினில் ஆளுகை செய்திடச் சடுதி வாருமேன்
சாலேமின் ராசா சங்கையின் ராசா ஸ்வாமி வாருமேன்
2
சீக்கிரம் வருவோமென்றுரைத்துப்போன செல்வக்குமாரனே இந்தச்
சீர்மிகும் மாந்தர்கள் தேடித்திரிகின்ற செய்திகேளீரோ?
சாலேமின் ராசா சங்கையின் ராசா ஸ்வாமி வாருமேன்
3
எட்டி எட்டி உம்மை அண்ணாந்து பார்த்துக் கண்பூத்துப் போகுதே நீர்
சுட்டிக்காட்டிப்போன வாக்குத்தத்தம் நிறைவேறலாகுதே
சாலேமின் ராசா சங்கையின் ராசா ஸ்வாமி வாருமேன்
4
நங்கை எருசலேம்பட்டினம் உம்மை நாடித்தேடுதே இந்த
நானிலத்திலுள்ள ஜீவப்பிராணிகள் தேடிவாடுதே
சாலேமின் ராசா சங்கையின் ராசா ஸ்வாமி வாருமேன்
5
சாட்சியாகச் சுபவிசேஷம் தாரணிமேவுதே உந்தச்
சாட்சிகளுடைய இரத்தங்களெல்லாம் தாவிக் கூவுதே
சாலேமின் ராசா சங்கையின் ராசா ஸ்வாமி வாருமேன்
சாலேமின் ராசா சங்கையின் ராசா / Saalemin Raasaa Sangaiyin Raasaa / Salemin Raja Sangeyin Raja | C. Dinesh
சாலேமின் ராசா சங்கையின் ராசா / Saalemin Raasaa Sangaiyin Raasaa / Salemin Raja Sangeyin Raja | Kirubavathi
சாலேமின் ராசா சங்கையின் ராசா / Saalemin Raasaa Sangaiyin Raasaa / Salemin Raja Sangeyin Raja | Jollee Abraham
சாலேமின் ராசா சங்கையின் ராசா / Saalemin Raasaa Sangaiyin Raasaa / Salemin Raja Sangeyin Raja