போற்றி துதிப்போம் எம் தேவ தேவனே / Potri Thudipom Em Deva Devanai / Potri Thuthipom Em Deva Devanai
1
போற்றி துதிப்போம் எம் தேவ தேவனே
புதிய கிருபையுடனே
நேற்றும் இன்றும் என்றும் மாறா இயேசுவை
நாம் என்றும் பாடித்துதிப்போம்
நேற்றும் இன்றும் என்றும் மாறா இயேசுவை
நாம் என்றும் பாடித்துதிப்போம்
இயேசு என்னும் நாமமே என்
ஆத்துமாவின் கீதமே
என் நேசர் இயேசுவை நான் என்றும்
ஏற்றி மகிழ்ந்திடுவேன்
என் நேசர் இயேசுவை நான் என்றும்
ஏற்றி மகிழ்ந்திடுவேன்
2
கோர பயங்கரமான புயலில்
கொடிய அலையின் மத்தியில்
காக்கும் கரங் கொண்டு மார்பில் சேர்த்தணைத்த
அன்பை என்றும் பாடுவேன்
காக்கும் கரங் கொண்டு மார்பில் சேர்த்தணைத்த
அன்பை என்றும் பாடுவேன்
இயேசு என்னும் நாமமே என்
ஆத்துமாவின் கீதமே
என் நேசர் இயேசுவை நான் என்றும்
ஏற்றி மகிழ்ந்திடுவேன்
என் நேசர் இயேசுவை நான் என்றும்
ஏற்றி மகிழ்ந்திடுவேன்
3
யோர்தான் நதி போன்ற சோதனையிலும்
சோர்ந்தமிழ்ந்து மாளாதே
ஆர்க்கும் ஜெய தொனியோடே
பாதுகாத்த அன்பை என்றும் பாடுவேன்
ஆர்க்கும் ஜெய தொனியோடே
பாதுகாத்த அன்பை என்றும் பாடுவேன்
இயேசு என்னும் நாமமே என்
ஆத்துமாவின் கீதமே
என் நேசர் இயேசுவை நான் என்றும்
ஏற்றி மகிழ்ந்திடுவேன்
என் நேசர் இயேசுவை நான் என்றும்
ஏற்றி மகிழ்ந்திடுவேன்
4
தாய் தன் பாலகனையே மறப்பினும்
நான் மறவேன் என்று சொன்னதால்
தாழ்த்தி என்னை அவர் கையில் தந்து
ஜீவபாதை என்றும் ஓடுவேன்
தாழ்த்தி என்னை அவர் கையில் தந்து
ஜீவபாதை என்றும் ஓடுவேன்
இயேசு என்னும் நாமமே என்
ஆத்துமாவின் கீதமே
என் நேசர் இயேசுவை நான் என்றும்
ஏற்றி மகிழ்ந்திடுவேன்
என் நேசர் இயேசுவை நான் என்றும்
ஏற்றி மகிழ்ந்திடுவேன்
5
பூமியகிலமும் சாட்சியாகவே
போங்களென்ற கட்டளையதால்
ஆவி ஆத்துமாவும் தேகம் யாவும் தந்து
என்றும் தொண்டு செய்குவேன்
ஆவி ஆத்துமாவும் தேகம் யாவும் தந்து
என்றும் தொண்டு செய்குவேன்
இயேசு என்னும் நாமமே என்
ஆத்துமாவின் கீதமே
என் நேசர் இயேசுவை நான் என்றும்
ஏற்றி மகிழ்ந்திடுவேன்
என் நேசர் இயேசுவை நான் என்றும்
ஏற்றி மகிழ்ந்திடுவேன்
போற்றி துதிப்போம் எம் தேவ தேவனே / Potri Thudipom Em Deva Devanai / Potri Thuthipom Em Deva Devanai | Pauline Matthew / New Life Church Dublin, Dublin, Ireland
போற்றி துதிப்போம் எம் தேவ தேவனே / Potri Thudipom Em Deva Devanai / Potri Thuthipom Em Deva Devanai | Davidsam Joyson / Full Gospel Pentecostal Church Nagercoil (FGPC Nagercoil), Nagercoil, Kanyakumari, Tamil Nadu, India