எண்ணில் அடங்கா ஸ்தோத்திரம் தேவா / Ennil Adanga Sthothiram Deva / Ennil Adanga Sthothiram Theva

எண்ணில் அடங்கா ஸ்தோத்திரம் தேவா / Ennil Adanga Sthothiram Deva / Ennil Adanga Sthothiram Theva

எண்ணில் அடங்கா ஸ்தோத்திரம் தேவா
என்றென்றும் நான் பாடுவேன்
இந்நாள் வரை என் வாழ்விலே
நீர் செய்த நன்மைக்கே

எண்ணில் அடங்கா ஸ்தோத்திரம் தேவா
என்றென்றும் நான் பாடுவேன்

1
பூமியில் வாழ்கின்ற யாவும்
அதின் மேல் உள்ள ஆகாயமும்
வான்தூதர் சேனைகள் யாவும்
தேவா உம்மைப் போற்றுதே

எண்ணில் அடங்கா ஸ்தோத்திரம் தேவா
என்றென்றும் நான் பாடுவேன்

2
சூரிய சந்திரரோடே
சகல நட்சத்திர கூட்டமும்
ஆகாயப் பறவைகள் யாவும்
தேவா உம்மைப் போற்றுதே

எண்ணில் அடங்கா ஸ்தோத்திரம் தேவா
என்றென்றும் நான் பாடுவேன்

3
காட்டினில் வாழ்கின்ற யாவும்
கடும் காற்றும் பனித் தூறலும்
நாட்டினில் வாழ்கின்ற யாவும்
நாதா உம்மைப் போற்றுதே

எண்ணில் அடங்கா ஸ்தோத்திரம் தேவா
என்றென்றும் நான் பாடுவேன்

4
பாவ மனுக்குலம் யாவும்
தேவா உம் அன்பினை உணர்ந்தே
சிலுவையின் தியாகத்தைக் கண்டு
ஒயா துதி பாடுதே

எண்ணில் அடங்கா ஸ்தோத்திரம் தேவா
என்றென்றும் நான் பாடுவேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!