ஒரு கோடிப் பாடல்கள் / Oru Kodi Paadalgal / Oru Kodi Paadalkal / Oru Kodi Padalgal / Oru Kodi Padalkal
ஒரு கோடிப்பாடல்கள் நான் பாடுவேன் அதைப்
பாமாலையாக நான் சூடுவேன்
ஒரு கோடிப்பாடல்கள் நான் பாடுவேன் அதைப்
பாமாலையாக நான் சூடுவேன்
உலகெல்லாம் நற்செய்தி நானாகுவேன் உந்தன்
புகழ்ப்பாடி புகழ்ப்பாடி நான் வாழுவேன்
உலகெல்லாம் நற்செய்தி நானாகுவேன் உந்தன்
புகழ்ப்பாடி புகழ்ப்பாடி நான் வாழுவேன்
ஒரு கோடிப்பாடல்கள் நான் பாடுவேன் அதைப்
பாமாலையாக நான் சூடுவேன்
1
இளங்காலைப் பொழுதுந்தன் துதிபாடுதே அங்கு
விரிகின்ற மலர் உந்தன் புகழ்பாடுதே
இளங்காலைப் பொழுதுந்தன் துதிபாடுதே அங்கு
விரிகின்ற மலர் உந்தன் புகழ்பாடுதே
அலை ஓயாக் கடல் உந்தன் கருணை மனம் வந்து
கரை சேரும் நுரை யாவும் கவிதைச் சரம்
அலை ஓயாக் கடல் உந்தன் கருணை மனம் வந்து
கரை சேரும் நுரை யாவும் கவிதைச் சரம்
ஆதியும் நீயே அந்தமும் நீயே
பாடுகிறேன் உனை இயேசுவே
அன்னையும் நீயே தந்தையும் நீயே
போற்றுகிறேன் உனை இயேசுவே
ஒரு கோடிப்பாடல்கள் நான் பாடுவேன் அதைப்
பாமாலையாக நான் சூடுவேன்
2
மனவீணை தனை இன்று நீ மீட்டினாய் அதில்
மலர்பாக்கள் பலகோடி உருவாக்கினாய்
மனவீணை தனை இன்று நீ மீட்டினாய் அதில்
மலர்பாக்கள் பலகோடி உருவாக்கினாய்
என் வாழ்வும் ஒரு பாடல் இசை வேந்தனே அதில்
எழும் ராகம் எல்லாம் உன் புகழ் பாடுதே
என் வாழ்வும் ஒரு பாடல் இசை வேந்தனே அதில்
எழும் ராகம் எல்லாம் உன் புகழ் பாடுதே
ஆதியும் நீயே அந்தமும் நீயே
பாடுகிறேன் உனை இயேசுவே
அன்னையும் நீயே தந்தையும் நீயே
போற்றுகிறேன் உனை இயேசுவே
ஒரு கோடிப்பாடல்கள் நான் பாடுவேன் அதைப்
பாமாலையாக நான் சூடுவேன்
ஒரு கோடிப்பாடல்கள் நான் பாடுவேன் அதைப்
பாமாலையாக நான் சூடுவேன்
உலகெல்லாம் நற்செய்தி நானாகுவேன் உந்தன்
புகழ்ப்பாடி புகழ்ப்பாடி நான் வாழுவேன்
உலகெல்லாம் நற்செய்தி நானாகுவேன் உந்தன்
புகழ்ப்பாடி புகழ்ப்பாடி நான் வாழுவேன்
ஒரு கோடிப்பாடல்கள் நான் பாடுவேன் அதைப்
பாமாலையாக நான் சூடுவேன்
ஒரு கோடிப் பாடல்கள் / Oru Kodi Paadalgal / Oru Kodi Paadalkal / Oru Kodi Padalgal / Oru Kodi Padalkal | Vijayakumari
