நள்ளிரவில் மா தெளிவாய் / Nalliravil Maa Thelivaai / Nalliravil Maa Thelivai / Nalliravil Ma Thelivaai / Nalliravil Ma Thelivai / Naliravil Maa Thelivaai / Naliravil Maa Thelivai / Naliravil Ma Thelivaai / Naliravil Ma Thelivai

1   
நள்ளிரவில் மா தெளிவாய்
மாண் பூர்வ கீதமே
விண் தூதர் வந்தே பாடினார்
பொன் வீணை மீட்டியே
மாந்தர்க்கு சாந்தம் நல் மனம்
ஸ்வாமி அருளாலே
அமர்ந்தே பூமி கேட்டதாம்
விண் தூதர் கீதமே

2   
இன்றும் விண் விட்டுத் தூதர்கள்
தம் செட்டை விரித்தே
துன்புற்ற லோகம் எங்குமே
இசைப்பார் கீதமே
பூலோகக் கஷ்டம் தாழ்விலும்
பாடுவார் பறந்தே
பாபேல் கோஷ்டத்தை அடக்கும்
விண் தூதர் கீதமே

3   
விண்ணோரின் கீதம் கேட்டுப் பின்
ஈராயிரம் ஆண்டும்
மண்ணோரின் பாவம் பகை போர்
பூலோகத்தை இன்றும்
வருந்தும் மாந்தர் கோஷ்டத்தில்
கேளார் அக்கானமே
போர் ஓய்ந்தமர்ந்து கேட்டிடும்
விண் தூதர் கீதமே

4   
பார் வாழ்க்கையின் மா பாரத்தால்
நைந்து தவிப்போரே
சோர்ந்தே போய்ப் பாதை நகர்ந்து
தள்ளாடிடுவோரே
நோக்கும் இதோ உதித்ததே
மா நற் பொற் காலமே
நோவை மறந்து கேட்டிடும்
விண் தூதர் கீதமே

5   
தோன்றிடும் இதோ சீக்கிரம்
பேரின்ப காலமே
சான்றோராம் தீர்க்கர் ஆண்டாண்டும்
உரைத்த காலமே
போர் ஓய்ந்து பூமி செழிக்கும்
பூர்வ மாண்போடுமே
பாரெங்கும் பரந்தொலிக்கும்
விண் தூதர் கீதமே

நள்ளிரவில் மா தெளிவாய் / Nalliravil Maa Thelivaai / Nalliravil Maa Thelivai / Nalliravil Ma Thelivaai / Nalliravil Ma Thelivai / Naliravil Maa Thelivaai / Naliravil Maa Thelivai / Naliravil Ma Thelivaai / Naliravil Ma Thelivai

நள்ளிரவில் மா தெளிவாய் / Nalliravil Maa Thelivaai / Nalliravil Maa Thelivai / Nalliravil Ma Thelivaai / Nalliravil Ma Thelivai / Naliravil Maa Thelivaai / Naliravil Maa Thelivai / Naliravil Ma Thelivaai / Naliravil Ma Thelivai

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!