நான் பயப்படவே மாட்டேன் என் தேவன் என்னோடு / Naan Bayappadave Maataen En Devan Ennodu
நான் பயப்படவே மாட்டேன்
என் தேவன் என்னோடு
நான் கலங்கிடவே மாட்டேன்
என் கர்த்தர் என்னோடு
பாடுவேன் பாடுவேன் பாடிடுவேன்
உம்மை துதிப்பேன் துதிப்பேன் துதித்திடுவேன்
1
மரணம் வருவதாயிருந்தாலும் பயப்படவே மாட்டேன்
துன்பம் தொல்லைகள் வந்தாலும் பயப்படவே மாட்டேன்
ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால் அதனை ஜெயித்திடுவேன்
சாட்சியின் வசனத்தினால் சாத்தானை முறியடிப்பேன்
நான் பயப்படவே மாட்டேன்
என் தேவன் என்னோடு
நான் கலங்கிடவே மாட்டேன்
என் கர்த்தர் என்னோடு
2
அக்கினி ஊடாய் நடந்தாலும் பயப்படவே மாட்டேன்
ஆபத்து இடையில் வந்தாலும் பயப்படவே மாட்டேன்
என் இயேசு எப்போதும் என்னோடு இருக்கின்றார்
என்னை அவர் தம் கரத்தால் தாங்கியே அணைத்திடுவார்
நான் பயப்படவே மாட்டேன்
என் தேவன் என்னோடு
நான் கலங்கிடவே மாட்டேன்
என் கர்த்தர் என்னோடு
3
தீமை என்னை தொடர்ந்தாலும் பயப்படவே மாட்டேன்
சோதனை என்னை சூழ்ந்தாலும் பயப்படவே மாட்டேன்
வாக்குரைத்த வல்லவர் என்னோடு வருகின்றார்
வருகையில் அவரோடு நானும் பறந்திடுவென்
நான் பயப்படவே மாட்டேன்
என் தேவன் என்னோடு
நான் கலங்கிடவே மாட்டேன்
என் கர்த்தர் என்னோடு
