மேலோகத்தில் என் பங்கு நீர் / Melogaththil En Pangu Neer / Melogathil En Pangu Neer

மேலோகத்தில் என் பங்கு நீர் / Melogaththil En Pangu Neer / Melogathil En Pangu Neer

1   
மேலோகத்தில் என் பங்கு நீர்
கிறிஸ்துவே கிறிஸ்துவே
மேலான நன்மை தேவரீர்
கிறிஸ்துவே கிறிஸ்துவே
நீர் பாரில் ரத்தம் சிந்தினீர்
பேரன்பைக் காட்டி மரித்தீர்
சீர்கெட்ட என்னை ரட்சித்தீர்
கிறிஸ்துவே கிறிஸ்துவே

2   
பூலோக மேன்மை வாஞ்சியேன்
கிறிஸ்துவே கிறிஸ்துவே
மேலோக இன்பம் நாடுவேன்
கிறிஸ்துவே கிறிஸ்துவே
இப்பாரின் வாழ்வு நில்லாதே
தப்பாமல் வாடிப்போகுமே
ஒப்பற்ற செல்வம் நீர் நீரே
கிறிஸ்துவே கிறிஸ்துவே

3   
நீர் ஏழையேனைக் கைவிடீர்
கிறிஸ்துவே கிறிஸ்துவே
சீராகக் காத்து ஆளுவீர்
கிறிஸ்துவே கிறிஸ்துவே
பொன் வெள்ளி ஆஸ்தி போயினும்
துன்புற்றுப் பாடுபடினும்
என் விசுவாசம் நிலைக்கும்
கிறிஸ்துவே கிறிஸ்துவே

4   
தீயோன் விரோதம் செய்யினும்
கிறிஸ்துவே கிறிஸ்துவே
ஓயாமலே போராடினும்
கிறிஸ்துவே கிறிஸ்துவே
அம்மூர்க்கம் கண்டு அஞ்சிடேன்
உம்மாலே வெற்றி சிறப்பேன்
கெம்பீர கீதம் பாடுவேன்
கிறிஸ்துவே கிறிஸ்துவே

5   
வெம் சாவையும் மேற்கொள்ளுவேன்
கிறிஸ்துவே கிறிஸ்துவே
உம் நேச மார்பில் சுகிப்பேன்
கிறிஸ்துவே கிறிஸ்துவே
பேரன்பரே கை தாங்குவீர்
நீர் விண்ணில் சேர்த்து வாழ்விப்பீர்
ஓயாப் பேரின்பம் ஈகுவீர்
கிறிஸ்துவே கிறிஸ்துவே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!