மன்னிப்பு அருளும் | Mannippu Arulum

மன்னிப்பு அருளும் | Mannippu Arulum

1
மன்னிப்பு அருளும் மாபெரும் அரசே
உனதுள்ளம் சமுத்திரமோ
மன்னிப்பு அருளும் மாபெரும் அரசே
உனதுள்ளம் சமுத்திரமோ

தண்டிக்க மறுத்த தரணியின் அரசே
உனதுள்ளம் கருணை ஊற்றோ என்னை
தண்டிக்க மறுத்த தரணியின் அரசே
உனதுள்ளம் கருணை ஊற்றோ

இது எங்கும் உண்டோ இது எங்கும் உண்டோ
எந்தன் சிந்தைக்கு மேலான விந்தை அல்லோ என்னைத்
தண்டிக்க மறுத்தத் தரணியின் அரசே
உனதுள்ளம் கருணை ஊற்றோ

2
கைகளும் கால்களும் செய்தவற்றை அந்த
ஆணிகள் துளைத்ததால் நீக்கினீரோ
கைகளும் கால்களும் செய்தவற்றை அந்த
ஆணிகள் துளைத்ததால் நீக்கினீரோ

பல வலைகளில் சிக்கிய பாவி என்னை
இந்த வாதைகள் ஏற்று நீர் மீட்டதேனோ

இது எங்கும் உண்டோ இது எங்கும் உண்டோ
எந்தன் சிந்தைக்கு மேலான விந்தை அல்லோ என்னைத்
தண்டிக்க மறுத்தத் தரணியின் அரசே
உனதுள்ளம் கருணை ஊற்றோ

3
பவுல் போன்ற தூயவர் செய்த வேலை இந்தப்
பாவியின் பொறுப்பினில் தந்ததேனோ
பவுல் போன்ற தூயவர் செய்த வேலை இந்தப்
பாவியின் பொறுப்பினில் தந்ததேனோ

உந்தன் பரலோக தூதரும் விரும்பும் வேலை
இந்தத் தரணியில் எம்மிடம் வைத்ததேனோ

இது எங்கும் உண்டோ இது எங்கும் உண்டோ
எந்தன் சிந்தைக்கு மேலான விந்தை அல்லோ என்னைத்
தண்டிக்க மறுத்தத் தரணியின் அரசே
உனதுள்ளம் கருணை ஊற்றோ

உனதுள்ளம் கருணை ஊற்றோ

மன்னிப்பு அருளும் | Mannippu Arulum | Emil Jebasaingh

மன்னிப்பு அருளும் | Mannippu Arulum | Meghala Rampert Ratnaiya | Emil Jebasaingh

மன்னிப்பு அருளும் | Mannippu Arulum | Meghala Rampert Ratnaiya | Emil Jebasaingh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!