கிறிஸ்துவின் ரத்தம் நீதியும் / Kristhuvin Raththam Needhiyum / Kristhuvin Raththam Neethiyum / Kristhuvin Ratham Needhiyum / Kristhuvin Ratham Neethiyum

கிறிஸ்துவின் ரத்தம் நீதியும் / Kristhuvin Raththam Needhiyum / Kristhuvin Raththam Neethiyum / Kristhuvin Ratham Needhiyum / Kristhuvin Ratham Neethiyum

1         
கிறிஸ்துவின் ரத்தம் நீதியும்
என் அலங்காரம் சால்வையும்
அதை உடுத்திட்டடியேன்
தெய்வாசனத்தின்முன் நிற்பேன்

2        
என் ஆத்துமத்தை ரட்சிக்க
மரத்தில் ரத்தம் சிந்தின
தெய்வாட்டுக் குட்டியானவர்
என் கர்த்தர் என் இரட்சகர்

3        
அவரின் ரத்தம் யாவிலும்
உயர்ந்த செல்வம் ஆஸ்தியும்
அதென்றைக்கும் பரத்திலே
செல்லும் மெய் மீட்புப் பொருளே

4        
அவர் ரட்சிப்பின் பலனாய்
அவர்க்கு நான் மா உண்மையாய்
உழைத்தெப்பாவங்களுக்கும்
முற்றும் மரித்துத் தேறினும்

5        
நான் அவரண்டை செல்லவே
இதை எல்லாம் நான் எண்ணாதே
மா ஏழைப் பாவி அடியேன்
நீர் மீட்டீர் சேர்த்திடும் என்பேன்

6        
தெய்வீக மைந்தா இயேசுவே
மனிதனாய் நீர் ஜென்மித்தே
உயர்ந்த விலைக்கென்னையும்
கொண்டீர்” என்றேநான் போற்றவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!