கர்த்தர் என் மேய்ப்பரே / Karththar En Meipparae / Karthar En Meiparai / Karthar En Meypparaay

கர்த்தர் என் மேய்ப்பரே / Karththar En Meipparae / Karthar En Meiparai / Karthar En Meypparaay

கர்த்தர் என் மேய்ப்பரே
குறை எனக்கில்லையே
அனுதினம் நல்மேய்ச்சல்
அன்புடன் அளித்திடுவார்

1
மரணத்தின் இருள்தன்னில்
நடந்திட நேர்ந்தாலும்
மீட்பரின் துணையுடனே
மகிழ்வுடன் நடந்திடுவேன்

கர்த்தர் என் மேய்ப்பரே
குறை எனக்கில்லையே
அனுதினம் நல்மேய்ச்சல்
அன்புடன் அளித்திடுவார்

2
பகைவரின் கண்களின் முன்
பரமன் எனக்கோர்
விருந்தை பாங்குடன் அருளுகின்றார்
பரவசம் கொள்ளுகிறேன்

கர்த்தர் என் மேய்ப்பரே
குறை எனக்கில்லையே
அனுதினம் நல்மேய்ச்சல்
அன்புடன் அளித்திடுவார்

3
எண்ணெயால் என் தலையை
இன்பமாய் அபிஷேகம்
செய்கிறார் என் தேவன்
உள்ளமும் பொங்கிடுதே

கர்த்தர் என் மேய்ப்பரே
குறை எனக்கில்லையே
அனுதினம் நல்மேய்ச்சல்
அன்புடன் அளித்திடுவார்

4
ஜீவனின் நாட்களெல்லாம்
நன்மையும் கிருபையுமே

தொடர்ந்திட வாழ்ந்திடுவேன்
கர்த்தரின் வீட்டினிலே

கர்த்தர் என் மேய்ப்பரே
குறை எனக்கில்லையே
அனுதினம் நல்மேய்ச்சல்
அன்புடன் அளித்திடுவார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!