கலங்காதே கலங்காதே கர்த்தர் உன்னைக் கைவிடமாட்டார் / Kalangadhe Kalangadhe Karthar Unnai Kaividamaattaar / Kalangathe Kalangathe Karthar Unnai Kaividamattaar

கலங்காதே கலங்காதே கர்த்தர் உன்னைக் கைவிடமாட்டார் / Kalangadhe Kalangadhe Karthar Unnai Kaividamaattaar / Kalangathe Kalangathe Karthar Unnai Kaividamattaar

கலங்காதே கலங்காதே
கலங்காதே கலங்காதே

கர்த்தர் உன்னைக் கைவிடமாட்டார்
கர்த்தர் உன்னைக் கைவிடமாட்டார்

கலங்காதே கலங்காதே

1
முள்முடி உனக்காக
இரத்தமெல்லாம் உனக்காக
முள்முடி உனக்காக
இரத்தமெல்லாம் உனக்காக

பாவங்களை அறிக்கையிடு
பாவங்களை அறிக்கையிடு

பரிசுத்தமாகி விடு நீ
பரிசுத்தமாகி விடு

கலங்காதே கலங்காதே
கர்த்தர் உன்னைக் கைவிடமாட்டார்

2
கல்வாரி மலைமேலே
காயப்பட்ட இயேசுவைப் பார்
கல்வாரி மலைமேலே
காயப்பட்ட இயேசுவைப் பார்

கரம் விரித்து அழைக்கின்றார்
கரம் விரித்து அழைக்கின்றார்

கண்ணீரோடு ஓடி வா நீ
கண்ணீரோடு ஓடி வா

கலங்காதே கலங்காதே
கர்த்தர் உன்னைக் கைவிடமாட்டார்

3
காலமெல்லாம் உடன் இருந்து
கரம்பிடித்து நடத்திச் செல்வார்
காலமெல்லாம் உடன் இருந்து
கரம்பிடித்து நடத்திச் செல்வார்

கண்ணீரெல்லாம் துடைப்பார்
கண்ணீரெல்லாம் துடைப்பார்

கண்மணி போல் காத்திடுவார் உன்னை
கண்மணி போல் காத்திடுவார்

கலங்காதே கலங்காதே
கர்த்தர் உன்னைக் கைவிடமாட்டார்

4
உலகத்தின் வெளிச்சம் நீ
எழுந்து ஒளி வீசு
உலகத்தின் வெளிச்சம் நீ
எழுந்து ஒளி வீசு

மலைமேல் உள்ள பட்டணம் நீ
மலைமேல் உள்ள பட்டணம் நீ

மறைவாக இருக்காதே
மறைவாக இருக்காதே

கலங்காதே கலங்காதே
கர்த்தர் உன்னைக் கைவிடமாட்டார்

5
உலகம் உன்னை வெறுத்திடலாம்
உற்றார் உன்னைத் துரத்திடலாம்
உலகம் உன்னை வெறுத்திடலாம்
உற்றார் உன்னைத் துரத்திடலாம்

உன்னை அழைத்தவரோ
உன்னை அழைத்தவரோ

உள்ளங்கையில் ஏந்திடுவார்
உள்ளங்கையில் ஏந்திடுவார்

கலங்காதே கலங்காதே
கர்த்தர் உன்னைக் கைவிடமாட்டார்

6
உன் நோய்கள் சுமந்து கொண்டார்
உன் பிணிகள் ஏற்றுக் கொண்டார்
உன் நோய்கள் சுமந்து கொண்டார்
உன் பிணிகள் ஏற்றுக் கொண்டார்

நீ சுமக்கத் தேவையில்லை
நீ சுமக்கத் தேவையில்லை

விசுவாசி அது போதும்
விசுவாசி அது போதும்

கலங்காதே கலங்காதே
கர்த்தர் உன்னைக் கைவிடமாட்டார்
கலங்காதே கலங்காதே
கர்த்தர் உன்னைக் கைவிடமாட்டார்

கலங்காதே கலங்காதே கர்த்தர் உன்னைக் கைவிடமாட்டார் / Kalangadhe Kalangadhe Karthar Unnai Kaividamaattaar / Kalangathe Kalangathe Karthar Unnai Kaividamattaar | Purnima | S. J.Berchmans

கலங்காதே கலங்காதே கர்த்தர் உன்னைக் கைவிடமாட்டார் / Kalangadhe Kalangadhe Karthar Unnai Kaividamaattaar / Kalangathe Kalangathe Karthar Unnai Kaividamattaar | S. J.Berchmans

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!