இம்மட்டும் தெய்வ கிருபை / Immattum Deva Kirubai

இம்மட்டும் தெய்வ கிருபை / Immattum Deva Kirubai

1   
இம்மட்டும் தெய்வ கிருபை
அடியேனை ரட்சித்து
இக்கட்டிலும் என் ஜீவனை
அன்பாய்ப் பராமரித்து
மாதயவாய் நடத்திற்று
இம்மட்டும் ஸ்வாமி எனக்கு
சகாயம் செய்து வாரார்

2   
என் ஜீவனுள்ள நாளெல்லாம்
நான் கண்ட உண்மைக்காக
கர்த்தாவுக் கெனதுண்மையாம்
துதியுண்டாவதாக
அதிசய அன்புடனே
சகாயம் செய்தீர் என்பதே
என் மனமும் என் வாக்கும்

3   
இனியும் உமதுண்மையில்
சகாயம் செய்து வாரும்
என் இயேசுவின் காயங்களில்
முடிய என்னைக் காரும்
கிறிஸ்துவின் ரத்தம் நீதியும்
எக்காலமும் எவ்விடமும்
என்னை ரட்சிக்க ஆமேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!