ஏதுக்கழுகிறாய் நீ / Edhukkalugiraai Nee / Aethukkalukiraay Nee / Ethukazhugirai nee
1
ஏதுக்கழுகிறாய் நீ ஏழை மாது நான் என்ன செய்வேன்
வாடையடிக்கிறதோ பாலா குளிரும் பொறுக்கலையோ
2
தந்தைக்கு தச்சு வேலை உன் தாயும் எளியவளே
இந்த மாசங்கடத்தில் பாலா என்ன பெருமையுண்டு
3
மூடத் துணியில்லையோ இந்த மாடயையுங் கொட்டிலிலே
வாடையடிக்கிறதோ பாலா கலங்கித் தவிக்கிறாயோ
4
இல்லாத ஏழைகட்கு இன்பம் எல்லாம் அளிக்க வந்த
செல்வமே நீயழுதால் ஏழை மாது நான் என்ன செய்வேன்
5
ஜோதியே சுந்தரமே மனு ஜாதியை மீட்க வந்த
நாதனே நீ அழுதால் இந்த நாடும் சிரியாதோ
