பக்தருடன் பாடுவேன் / Baktharudan Paaduven / Baktharudan Paaduvaen

பக்தருடன் பாடுவேன் / Baktharudan Paaduven / Baktharudan Paaduvaen

பக்தருடன் பாடுவேன் பரமசபை
முக்தர்குழாம் கூடுவேன்

அன்பால் அணைக்கும் அருள்நாதன் மார்பினில்
இன்பம் நுகர்ந்திளைப்பாறுவோர் கூட நான்

பக்தருடன் பாடுவேன் பரமசபை
முக்தர்குழாம் கூடுவேன்

1
அன்பு அழியாதல்லோ அவ்வண்ணமே
அன்பர் என் இன்பர்களும்
பொன்னடிப் பூமானின் புத்துயிர் பெற்றதால்
என்னுடன் தங்குவார் எண்ணூழி காலமாய்

பக்தருடன் பாடுவேன் பரமசபை
முக்தர்குழாம் கூடுவேன்

2
இகமும் பரமும் ஒன்றே இவ்வடியார்க் கு
அகமும் ஆண்டவன் அடியே
சுகமும் நற்செல்வமும் சுற்றமும் உற்றமும்
இகலில்லா ரட்சகன் இன்பப் பொற்பாதமே

பக்தருடன் பாடுவேன் பரமசபை
முக்தர்குழாம் கூடுவேன்

3
தாயின் தயவுடையதாய்த் தமியன் நின்
சேயன் கண் மூடுகையில்
பாயொளிப் பசும் பொன்னே பக்தர் சிந்தாமணி
தூயா திருப்பாதத் தரிசனம் தந்தருள்

பக்தருடன் பாடுவேன் பரமசபை
முக்தர்குழாம் கூடுவேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!