அருளின் பொழுதான / Arulin Poludhaana / Arulin Poludhana / Arulin Pozhudhaana / Aruzhiin Poludhana

அருளின் பொழுதான / Arulin Poludhaana / Arulin Poludhana / Arulin Pozhudhaana / Aruzhiin Poludhana

1      
அருளின் பொழுதான
அன்புள்ள இயேசுவே
நரரின் ஜீவனான
உம்மாலே என்னிலே
வெளிச்சமுங் குணமும்
சந்தோஷமும் திடமும்
வரக் கடவது

2        
என் பாவத்தை மன்னித்து
அகற்றியருளும்
சினத்தை விட்டுவிட்டு
என்மேல் அன்பாயிரும்
என் நெஞ்சின் பயமற
நீர் சமாதானங் தரப்
பணிந்து கேட்கிறேன்

3        
அடியானை மீட்டோரே
நான் உம்மைச் சேவித்து
தெய்வீக பக்தியோடே
நடக்கிறதற்கு
என் சிந்தையை முறித்து
புதியதாய்ச் சிஷ்டித்து
படைத்துக் கொண்டிரும்

4        
நான் உம்மைச் சார்ந்தோனாக
எப்போதும் உண்மையில்
நிலைக்கிறதற்காக
நீர் எனக்கறிவில்
வளர்ச்சி தந்தன்பாலே
தெய்வீக வார்த்தையாலே
வழியைக் காண்பியும்

5        
நான் லோகத்தை வெறுத்து
என் நெஞ்சை உமக்கு
எந்நேரமுங் கொடுத்து
பிழைக்க எனது
துரிச்சையை நீர் பேர்த்து
உம்மண்டை என்னைச் சேர்த்து
உம்மாலே ஆற்றுமேன்

6        
நான் உம்மை உண்மையாகச்
சிநேகித் துமக்குப்
பிரிய மார்க்கமாக
நடக்க உமது
சிநேகத்தை நன்றாக
என் நெஞ்சிலே தீயாக
எரியப் பண்ணுமேன்

7        
நீர் உமதாவியாலே
திடனும் பலமும்
தந்தென்னில் தயவாலே
எல்லாம் நடப்பியும்
என்னாலே தான் நான் கெட்டோன்
நம்மைக்கெல்லாம் நான் செத்தோன்
என் ஜென்ம பாவத்தால்

8        
தயாபரா ரட்சித்து
பேய்ச் செயல் யாவையும்
என் ஆத்துமத்தை விட்டு
விலக்கியருளும்
நான் பரிசுத்தமாக
நடக்கும் படியாகத்
துணை நீர் கர்த்தரே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!