அக்கினி / மேகம் போன்ற சாட்சிகளே | Akkini / Megan Pondra Saatchigale / Megan Pondra Saatchigalae
மேகம் போன்ற சாட்சிகளே எம்மை முன் சென்ற சுத்தர்களே
பரலோகத்தின் வீதிகளில் எங்கள் ஓட்டத்தை காண்பவரே
இவ்வுலகென்னை மயக்கயிலே சாத்தானின் சதிகள் வளைக்கையிலே

உங்கள் சாட்சியை நினைத்திடுவேன் உந்தன் ஓட்டத்தை தொடர்ந்திடுவேன்
உந்தன் சாட்சியை நினைத்திடுவேன் உந்தன் ஓட்டத்தை தொடர்ந்திடுவேன்
அக்கினியுள்ளே வேகவில்லை தண்ணீரினுள்ளே மூழ்கவில்லை
கடும்புயல் அடித்தும் அசையவில்லை உன்னத தேவனின் சீஷர்களே
முட்ச்செடியின் மோசேயே தேவ மகிமையை கண்டவனே
பார்வோனின் அரண்மனை வாழ்கையையும் குப்பையாய் எண்ணின சீமானே
நிந்தையின் குரலை கேட்கையிலே திறப்பின் வாசலில் நின்றவனே

உம்மை போல் நானும் ஆகனுமே அவரின் நண்பனாய் மாறனுமே
உம்மை போல் நானும் ஆகனுமே அவரின் நண்பனாய் ஆகனுமே
அக்கினியுள்ளே வேகவில்லை தண்ணீரினுள்ளே மூழ்கவில்லை
கடும்புயல் அடித்தும் அசையவில்லை உன்னத தேவனின் சீஷர்களே
அக்கினியுள்ளே வேகவில்லை தண்ணீரினுள்ளே மூழ்கவில்லை
கடும்புயல் அடித்தும் அசையவில்லை உன்னத தேவனின் சீஷர்களே
சூழல் காற்றின் எலியாவே யேசபேலை வென்றவனே
பாகாலை வெட்கப்படுத்தி சவாலை வென்றவனே
கர்மேலின் மேல் அக்கினியை இறக்கி கர்த்தரே தேவன் என்று முழங்கி
இவ்வுலகே பின் மாறினாலும் தேவனுக்காக நின்றவனே
அக்கினியுள்ளே வேகவில்லை தண்ணீரினுள்ளே மூழ்கவில்லை
கடும்புயல் அடித்தும் அசையவில்லை உன்னத தேவனின் சீஷர்களே
அக்கினியுள்ளே வேகவில்லை தண்ணீரினுள்ளே மூழ்கவில்லை
கடும்புயல் அடித்தும் அசையவில்லை உன்னத தேவனின் சீஷர்களே
அக்கினியுள்ளே வேகவில்லை தண்ணீரினுள்ளே மூழ்கவில்லை
கடும்புயல் அடித்தும் அசையவில்லை உன்னத தேவனின் சீஷர்களே
மேகம் போன்ற சாட்சிகளே | Megan Pondra Saatchigale / Megan Pondra Saatchigalae | Premji Ebenezer | John Rohith