அதிகாலை இயேசு வந்து / Adhikaalai Yesu Vandhu / Adhikaalai Yesu Vanthu / Adhikalai Yesu Vandhu / Adhikalai Yesu Vanthu

அதிகாலை இயேசு வந்து / Adhikaalai Yesu Vandhu / Adhikaalai Yesu Vanthu / Adhikalai Yesu Vandhu / Adhikalai Yesu Vanthu

1
அதிகாலை இயேசு வந்து
கதவண்டை தினம் நின்று
தட்டித் தமக்குத் திறந்து
இடம் தரக் கேட்கிறார்

2
உம்மை நாங்கள் களிப்பாக
வாழ்த்தி நேசரே அன்பாக
எங்களண்டை சேர்வீராக
என்று வேண்டிக்கொள்ளுவோம்

3
தினம் எங்களை நடத்தி
சத்துருக்களைத் துரத்தி
எங்கள் மனதை எழுப்பி
நல்ல மேய்ப்பராயிரும்

4
தாழ்ச்சி நாங்கள் அடையாமல்
நம்பிக்கையில் தளராமல்
நிற்க எங்களுக்கோயாமல்
நல்ல மேய்ச்சல் அருளும்

5
ஆமேன் கேட்டது கிடைக்கும்
இயேசு இன்றும் என்றென்றைக்கும்
நம்மைக் காப்பார் அவர் கைக்கும்
எல்லாம் ஒப்புவிக்கிறோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!