நல் மீட்பரே இந்நேரத்தில் / Nal Meetpare Innerathil / Nal Meetparae Innerathil

நல் மீட்பரே இந்நேரத்தில் / Nal Meetpare Innerathil / Nal Meetparae Innerathil

1
நல் மீட்பரே இந்நேரத்தில் 
வந்தாசீர்வாதம் கூறுமேன்
உம் வார்த்தை கேட்டோர் மனதில் 
பேரன்பின் அனல் மூட்டுமேன்
வாழ்நாளிலும் சாங்காலத்தும்
ஆ இயேசுவே பிரகாசியும்

2
இன்றெங்கள் செய்கை யாவையும் 
தயாபரா நீர் போக்கினீர்
எல்லாரின் பாவம் தவறும்
மா அற்பச் சீரும் அறிந்தீர்
வாழ்நாளிலும் சாங்காலத்தும்
ஆ இயேசுவே பிரகாசியும்

3
எப்பாவத் தீங்கிலிருந்தும் 
விமோசனத்தைத் தாருமேன்
உள்ளான சமாதானமும் 
சுத்தாங்கமும் உண்டாக்குமேன்
வாழ்நாளிலும் சாங்காலத்தும்
ஆ இயேசுவே பிரகாசியும்

4
சந்தோஷம் பயபக்தியும் 
நீர் நிறைவாக ஈயுமேன்
உமக்கொப்பாக ஆசிக்கும் 
தூய்மையாம் உள்ளம் தாருமேன்
வாழ்நாளிலும் சாங்காலத்தும்
ஆ இயேசுவே பிரகாசியும்

5
தரித்திரம் துன்பம் பாவத்தால் 
இக்கட்டடைந்த யாரையும் 
கண்ணோக்கும் மா கிருபையால்
நீர் மீட்பர் நீர் சமஸ்தமும் 
வாழ்நாளிலும் சாங்காலத்தும்
ஆ இயேசுவே பிரகாசியும்     

ஆமேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!