வர வேணும் என தரசே / Vara Venum Ena Dharasae

வர வேணும் என தரசே / Vara Venum Ena Dharasae

வர வேணும் என தரசே
மனுவேல் இஸ்ரேல் சிரசே

அருணோதயம் ஒளிர் பிரகாசா
அசரீரி ஒரே சரு வேசா

வர வேணும் என தரசே
மனுவேல் இஸ்ரேல் சிரசே

1
வேதா கருணா கரா மெய்யான பரா பரா
ஆதார நிராதரா அன்பான சகோ தரா
தாதாவும் தாய் சகலமும் நீயே
நாதா உன் தாபரம் நல்குவாயே

வர வேணும் என தரசே
மனுவேல் இஸ்ரேல் சிரசே

2
படியோர் பவ மோசனா பரலோக சிம்மாசனா
முடியா தருள் போசனா முதன் மா மறை வாசனா
இடையர் குடிலிடை மேவி எழுந்தாய்
இமையவர் அடி தொழு மேன்மையின் எந்தாய்

வர வேணும் என தரசே
மனுவேல் இஸ்ரேல் சிரசே

3
வானோர் தொழும் நாதனே மறையாகம போதனே
கானவின் அதீதனே கலிலேய வினோதனே
ஞானகரமே நடு நிலை யோவா
நண்பா உனத நன்மையின் மகா தேவா

வர வேணும் என தரசே
மனுவேல் இஸ்ரேல் சிரசே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!