அம்மாவும் நீரே | Ammavum Neere
அம்மாவும் நீரே அப்பாவும் நீரே
என்னை பிள்ளை என்றவரே
அம்மாவும் நீரே அப்பாவும் நீரே
என்னை பிள்ளை என்றவரே
பாவி என்று பாராமல்
பிள்ளையாக என்னை மாற்றி
எனக்காய் உயிரை கொடுத்தீரே
அம்மாவும் நீரே அப்பாவும் நீரே
என்னை பிள்ளை என்றவரே
அம்மாவும் நீரே அப்பாவும் நீரே
என்னை பிள்ளை என்றவரே
பாவி என்று பாராமல்
பிள்ளையாக என்னை மாற்றி
எனக்காய் உயிரை கொடுத்தீரே
என் பாவம் அதிகமாய் பெருகும் போது
உம் கிருபை அதை காட்டிலும் பெருகினதே
நான் உம்மை நினைக்காமல் வாழ்ந்த போது
நீர் என்னை அதிகமாய் நேசித்தீரே
மறுவாழ்வு தந்த உயிரே
அன்பை அள்ளி தந்தவரே
உம்மை கட்டிப்பிடித்து
எந்நாளும் முத்தம் செய்வேன்
இந்த உலகம் மாயை ஆனாலும்
மனுஷன் மாறி போனாலும்
என் இதயம் உமக்காய்
என்றும் துடிக்குமய்யா
1
எத்தனையோ நன்மை செய்தேன்
உலகம் அதை பார்க்காமல்
என் ஒரு குறையை பார்த்தது
ஆயிரம் பாவம் செய்தேன்
ஆனாலோ நீர் எந்தன்
இதயத்தை மாத்ரம் கண்டீரே
எத்தனையோ நன்மை செய்தேன்
உலகம் அதை பார்க்காமல்
என் ஒரு குறையை பார்த்தது
ஆயிரம் பாவம் செய்தேன்
ஆனாலோ நீர் எந்தன்
இதயத்தை மாத்ரம் கண்டீரே
உலகம் என்னத்தை சொன்னாலும்
நீர் சொல்லும் ஒரு வார்த்தை போதுமே
உலகம் என்னத்தை சொன்னாலும்
நீர் சொல்லும் ஒரு வார்த்தை போதுமே
மறுவாழ்வு தந்த உயிரே
அன்பை அள்ளி தந்தவரே
உம்மை கட்டிப்பிடித்து
எந்நாளும் முத்தம் செய்வேன்
இந்த உலகம் மாயை ஆனாலும்
மனுஷன் மாறி போனாலும்
என் இதயம் உமக்காய்
என்றும் துடிக்குமய்யா
2
இரத்தத்தை மாத்ரம் அல்ல
இருந்த தண்ணீரையும்
எனக்காய் சிந்தினீரே
உயிரை பார்க்கிலும்
என்னை நேசித்தீரே
இதற்காய் என்ன செய்வேனோ
இரத்தத்தை மாத்ரம் அல்ல
இருந்த தண்ணீரையும்
எனக்காய் சிந்தினீரே
உயிரை பார்க்கிலும்
என்னை நேசித்தீரே
இதற்காய் என்ன செய்வேனோ
உந்தன் அன்பிற்கு ஈடாக
வேறு அன்பு இருக்க முடியுமோ
இதற்கு பதிலாக என்ன செய்வேன்
உயிருள்ள வரை உமக்காய் வாழ்வேன்
மறுவாழ்வு தந்த உயிரே
அன்பை அள்ளி தந்தவரே
உம்மை கட்டிப்பிடித்து
எந்நாளும் முத்தம் செய்வேன்
இந்த உலகம் மாயை ஆனாலும்
மனுஷன் மாறி போனாலும்
என் இதயம் உமக்காய்
என்றும் துடிக்குமய்யா
மறுவாழ்வு தந்த உயிரே
அன்பை அள்ளி தந்தவரே
உம்மை கட்டிப்பிடித்து
எந்நாளும் முத்தம் செய்வேன்
இந்த உலகம் மாயை ஆனாலும்
மனுஷன் மாறி போனாலும்
என் இதயம் உமக்காய்
என்றும் துடிக்குமய்யா
அம்மாவும் நீரே | Ammavum Neere | Beniel Walter | Isaac D