ஈசன் வந்து | Easan Vanthu / Easan Vandhu

ஈசன் வந்து | Easan Vanthu / Easan Vandhu

மகமப மபநிசரிச ரிமபநி நிரிபம நிசரிநி
நிசரிநி ப பநிதமகரி மகரி மகரி மகரி கரிசநிச

ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்
எழுந்து உயிர்த்தனன் நாள் ஒரு மூன்றில்
ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்
எழுந்து உயிர்த்தனன் நாள் ஒரு மூன்றில்

நேசமா மரியா மகதலேனா
நேரிலே இந்த செய்தியை கண்டாள்
நேசமா மரியா மகதலேனா
நேரிலே இந்த செய்தியை கண்டாள்

தேசத்தீர் இதன் உட்பொருள் கேளீர்
தேசத்தீர் இதன் உட்பொருள் கேளீர்

தேவர் வந்து நமக்குள் புகுந்தே

நாசமின்றி நமை நித்தம் காப்பார்
அகந்தையை நாம் கொன்று விட்டால்
நாசமின்றி நமை நித்தம் காப்பார்
அகந்தையை நாம் கொன்று விட்டால்
நாசமின்றி நமை நித்தம் காப்பார்
அகந்தையை நாம் கொன்று விட்டால்

அகந்தையை நாம் கொன்று விட்டால்

பாதமகரீகநிச சரிகம
பாதமகரீகநிச அ
ரிமபநி நிரிபம நிசரிநி
நிசரிநிதப பநிதமகரி மகரி மகரி மகரி கரிசநிச

அன்பு காண் மரியா மகதலேனா
ஆவி காணுதீர் இயேசு கிறிஸ்து
அன்பு காண் மரியா மகதலேனா
ஆவி காணுதீர் இயேசு கிறிஸ்து

முன்பு தீமை வடிவினை கொன்றால்
மூன்று நாளினில் நல்லுயிர் தோன்றும்
முன்பு தீமை வடிவினை கொன்றால்
மூன்று நாளினில் நல்லுயிர் தோன்றும்

பொன் பொலிந்த முகத்தினிற் கண்டே
பொன் பொலிந்த முகத்தினிற் கண்டே

போற்றுவாள் அந்த நல்லுயிர் தன்னை

அன்பெனும் மரியா மகதலேனா
ஆக சாலப் பெருங்களியிதுவே
அன்பெனும் மரியா மகதலேனா
ஆக சாலப் பெருங்களியிதுவே

ஆக சால பெருங்களியிதுவே

சா தநிசநிதபதபமகமா பதா
தா தநிசநிதபதப மகம கரிச
சரிகமப கமகரிக
சரிகபமா கரிசநிகா
நிநிநி ககக மமம ககக
ககக காரிநிதமா
நிநிநி ககக ககக மமம பபப பசரிக

உண்மை என்ற சிலுவையில் கட்டி
உணர்வை ஆணித் தவங்கொண்டடித்தால்
வன்மை பேருயிர் இயேசு கிறிஸ்து
வான மேனியில் அங்கு விளங்கும்

சரிக சரிக பதபப மகசரிகம
ரிகம கசரிகமமகச
சசாசநிதப மமமகரிச
சசாசநிதப மமமகரிச

பெண்மைக்காண் மரியா மகதலேனா
பேணும் நல்லறம் இயேசு கிறிஸ்து

நுண்மை கொண்ட பொருளிது கண்டீர்
நொடியில் இது பயின்றிடலாகும்
நுண்மை கொண்ட பொருளிது கண்டீர்
நொடியில் இது பயின்றிடலாகும்

ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்
எழுந்து உயிர்த்தனன் நாள் ஒரு மூன்றில்
ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்
எழுந்து உயிர்த்தனன் நாள் ஒரு மூன்றில்

ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்
எழுந்து உயிர்த்தனன் நாள் ஒரு மூன்றில்
ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்
எழுந்து உயிர்த்தனன் நாள் ஒரு மூன்றில்

ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்
எழுந்து உயிர்த்தனன் நாள் ஒரு மூன்றில்

ஈசன் வந்து | Easan Vanthu / Easan Vandhu | Kirubavathi Daniel, Amali Selina, Zimra Carnatic Choir | Kirubavathi Daniel | Mahakavi Bharathiyar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!