உந்தன் விருப்பம் போல / Undhan Viruppam Pola / Unthan Viruppam Pola / Undhan Virupam Pola / Unthan Virupam Pola
உந்தன் விருப்பம் போல
தினமும் என்னை நடத்திச் செல்லுமே
உந்தன் கரத்திலிருந்து நழுவிடாமலே
உந்தன் விருப்பம் போல
தினமும் என்னை நடத்திச் செல்லுமே
உந்தன் வழியிலிருந்து விலகிடாமலே
உந்தன் விருப்பம் போல என்னை
நீர் வனைந்துக் கொள்ளுமே
உந்தன் விருப்பம் போல என்னை
நீர் பயன்படுத்துமே
உந்தன் விருப்பம் போல
என்னைத் தருகிறேன்
உந்தன் விருப்பம் போல
தினமும் என்னை நடத்திச் செல்லுமே
உந்தன் கரத்திலிருந்து நழுவிடாமலே
உந்தன் விருப்பம் போல
தினமும் என்னை நடத்திச் செல்லுமே
உந்தன் வழியிலிருந்து விலகிடாமலே
1
உமக்கு பிரியனாக வாழ
உமக்கு உகந்தனாக மாற
உமது அருளை அள்ளித் தாருமே
உலகை விரும்பும் உணர்வைத் துறந்து
உயிரில் உமது வசனம் புரிந்து
உமக்குள் வளரச் சொல்லித்தாருமே
என்னுள் இருளை நீக்கியே
புது வெளிச்சமாகவே
நான் உலகில் ஒளிர்ந்திட
என்னுள் ஒளியாய் வாருமே
என்னுள் இருளை நீக்கியே
புது வெளிச்சமாகவே
நான் உலகில் ஒளிர்ந்திட
என்னுள் ஒளியாய் வாருமே
உந்தன் விருப்பம் போல
தினமும் என்னை நடத்திச் செல்லுமே
உந்தன் கரத்திலிருந்து நழுவிடாமலே
உந்தன் விருப்பம் போல
தினமும் என்னை நடத்திச் செல்லுமே
உந்தன் வழியிலிருந்து விலகிடாமலே
2
எனது குறைந்து உமது உயர்ந்து
மனதில் உமது விருப்பம் நிறைந்து
உமக்குள் முழுதும் இணையவேண்டுமே
எனக்குள் இருக்கும் குறைகள் ஒழிந்து
உமக்குள் இருந்து நிறைவாய் வளர்ந்து
உம்மைப் போல மாற வேண்டுமே
என்னுள் உம்மை உணர்ந்திட
இன்னும் உமக்காய் எழும்பிட
எங்கும் உம்மை உயர்த்திட
நீர் எனக்குள் வாருமே
என்னுள் உம்மை உணர்ந்திட
இன்னும் உமக்காய் எழும்பிட
எங்கும் உம்மை உயர்த்திட
நீர் எனக்குள் வாருமே
உந்தன் விருப்பம் போல
தினமும் என்னை நடத்திச் செல்லுமே
உந்தன் கரத்திலிருந்து நழுவிடாமலே
உந்தன் விருப்பம் போல
தினமும் என்னை நடத்திச் செல்லுமே
உந்தன் வழியிலிருந்து விலகிடாமலே
உந்தன் விருப்பம் போல என்னை
நீர் வனைந்துக் கொள்ளுமே
உந்தன் விருப்பம் போல என்னை
நீர் பயன்படுத்துமே
உந்தன் விருப்பம் போல
என்னைத் தருகிறேன்