பரத்திலேயிருந்துதான் / Paraththileirundhudhaan / Paraththileirunthuthaan / Parathileirundhudhaan / Parathileirunthuthaan / Paraththileirundhudhan / Paraththileirunthuthan / Parathileirundhudhan / Parathileirunthuthan

பரத்திலேயிருந்துதான் / Paraththileirundhudhaan / Paraththileirunthuthaan / Parathileirundhudhaan / Parathileirunthuthaan / Paraththileirundhudhan / Paraththileirunthuthan / Parathileirundhudhan / Parathileirunthuthan

1   
பரத்திலேயிருந்துதான்
அனுப்பப்பட்ட தூதன் நான்
நற்செய்தி அறிவிக்கிறேன்
பயப்படாதிருங்களேன்

2   
இதோ எல்லா ஜனத்துக்கும்
பெரிய நன்மையாய் வரும்
சந்தோஷத்தைக் களிப்புடன்
நான் கூறும் சுவிசேஷகன்

3   
இன்றுங்கள் கர்த்தரானவர்
மேசியா உங்கள் ரட்சகர்
தாவீதின் ஊரில் திக்கில்லார்
ரட்சிப்புக்காக ஜென்மித்தார்

4   
பரத்திலே நாம் ஏகமாய்
இனி இருக்கத்தக்கதாய்
இக்கட்டும் பாவமுமெல்லாம்
இம்மீட்பரால் நிவிர்த்தியாம்

5   
குறிப்பைச் சொல்வேன் ஏழையாய்
துணியில் சுற்றப்பட்டதாய்
இப்பிள்ளை முன்னணையிலே
கிடக்கும் ஆர் கர்த்தர் தாமே

1   
களிப்பாய் நாமும் மேய்ப்பரின்
பின்னாலே சென்று ஸ்வாமியின்
ஈவானதை நாம் கேட்டாற்போல்
சென்றுமே பார்ப்போம் வாருங்கள்

2   
ஆர் அங்கே முன்னணையிலே
கிடக்கிறார் என் மனதே
இப்பிள்ளையை நீ உற்றுப்பார்
இதே உன் இயேசு ஸ்வாமியார்

3   
என் ஸ்வாமி வாழ்க பாவியை
நீர் கைவிடாமல் இத்தனை
தாழ்வாய் என்னண்டை வந்தது
அளவில்லாத தயவு

4   
எல்லாம் சிஷ்டித்த தேவரீர்
இம்மட்டுக்கும் இறங்கினீர்
இங்கே இப்புல்லின்மேல் ஐயோ
நீர் ஸ்வாமி வைக்கப்பட்டீரோ

5   
ஆ இன்பமான இயேசுவே
மெய் ஆஸ்தியான உம்மையே
நான் பெற்றிருக்க என்றைக்கும்
என் நெஞ்சில் வாசமாயிரும்

6   
அத்தால் நான் நித்தம் பூரிப்பாய்
இருந்து மா சந்தோஷமாய்
இம்மாய்கையை வெறுக்கிறேன்
கதியாம் உம்மைப் பாடுவேன்

7   
பிரிய ஏக மைந்தனை
பாராமல் தந்த ஸ்வாமியை
இஸ்தோத்திரிப்போம் பூமிக்கு
ரட்சிப்பின் நாள் உதித்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!