இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும் / Inba Yesu Rajaavai Naan Parthaal Podhum / Inba Yesu Rajavai Naan Parthal Pothum

இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும் / Inba Yesu Rajaavai Naan Parthaal Podhum / Inba Yesu Rajavai Naan Parthal Pothum

1
இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும்
மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும்
இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும்
மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும்

நித்தியமாம் மோட்ச வீட்டில் சேர்ந்தால் போதும்
நித்தியமாம் மோட்ச வீட்டில் சேர்ந்தால் போதும்
அல்லேலூயா கூட்டத்தில் நான் மகிழ்ந்தால் போதும்
அல்லேலூயா கூட்டத்தில் நான் மகிழ்ந்தால் போதும்

இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும்
மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும்

2
இயேசுவின் இரத்தத்தாலே மீட்கப்பட்டு
வசனமாம் வேலியாலே காக்கப்பட்டு
இயேசுவின் இரத்தத்தாலே மீட்கப்பட்டு
வசனமாம் வேலியாலே காக்கப்பட்டு

கறை திறை அற்றப் பரிசுத்தரோடு
கறை திறை அற்றப் பரிசுத்தரோடு
ஏழையான் பொன் வீதியில் உலாவிடுவேன்
ஏழையான் பொன் வீதியில் உலாவிடுவேன்

இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும்
மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும்

3
தூதர்கள் வீணைகளை மீட்டும் போது
நிறைவான ஜெய கோஷம் முழங்கும்போது
தூதர்கள் வீணைகளை மீட்டும் போது
நிறைவான ஜெய கோஷம் முழங்கும்போது

அல்லேலூயா கீதம் பாடிக்கொண்டு
அல்லேலூயா கீதம் பாடிக்கொண்டு
அன்பராம் இயேசுவோடு அகமகிழ்வேன்
அன்பராம் இயேசுவோடு அகமகிழ்வேன்

இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும்
மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும்

4
முட்கிரீடம் சூட்டப்பட்ட தலையைப் பார்ப்பேன்
பொற்கிரீடம் சூட்டி நானும் புகழ்ந்திடுவேன்
முட்கிரீடம் சூட்டப்பட்ட தலையைப் பார்ப்பேன்
பொற்கிரீடம் சூட்டி நானும் புகழ்ந்திடுவேன்

வாரினால் அடிப்பட்ட முதுகைப் பார்த்து
வாரினால் அடிப்பட்ட முதுகைப் பார்த்து
ஒவ்வொரு காயங்களாய் முத்தம் செய்வேன்
ஒவ்வொரு காயங்களாய் முத்தம் செய்வேன்

இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும்
மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும்

5
என்னுள்ளம் நன்றியால் நிறைந்திடுதே
எந்தனின் பாக்கிய வீட்டை நினைக்கையிலே
என்னுள்ளம் நன்றியால் நிறைந்திடுதே
எந்தனின் பாக்கிய வீட்டை நினைக்கையிலே

அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
வர்ணிக்க எந்தன் நாவு போதாதையா
வர்ணிக்க எந்தன் நாவு போதாதையா

இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும்
மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும்

6
ஆகா எக்காளம் என்று முழங்கிடுமோ
ஏழை என் ஆவல் என்று தீர்ந்திடுமோ
ஆகா எக்காளம் என்று முழங்கிடுமோ
ஏழை என் ஆவல் என்று தீர்ந்திடுமோ

அப்பா என் கண்ணீர் என்று துடைக்கிறாரோ
அப்பா என் கண்ணீர் என்று துடைக்கிறாரோ
ஆவலாய் ஏங்கிடுதே எனதுள்ளமும்
ஆவலாய் ஏங்கிடுதே எனதுள்ளமும்

இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும்
மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும்

இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும் / Inba Yesu Rajaavai Naan Parthaal Podhum / Inba Yesu Rajavai Naan Parthal Pothum | Lizy Dhasaiah, Sherlin Sam, John Benjamin, Gladwin John, Rini Chacko, Reena Rachel, Lishania Isravel, Pressilla | Joel Thomasraj | Lizy Dhasaiah

இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும் / Inba Yesu Rajaavai Naan Parthaal Podhum / Inba Yesu Rajavai Naan Parthal Pothum | Lizy Dhasaiah

இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும் / Inba Yesu Rajaavai Naan Parthaal Podhum / Inba Yesu Rajavai Naan Parthal Pothum | MPT Ministries, Chennai, Tamil Nadu, India | Lizy Dhasaiah

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!