துயருற்ற வேந்தரே / Dhuyarutra Vendharae / Thuyarutra Vendharae

துயருற்ற வேந்தரே / Dhuyarutra Vendharae / Thuyarutra Vendharae

1   
துயருற்ற வேந்தரே
சிலுவை ஆசனரே
நோவால் வாடும் முகத்தை
இருள் திரை மூடிற்றே
எண்ணிறைந்த துன்பம் நீர்
மௌனமாகச் சகித்தீர்

2   
பலியாக மரிக்கும்
வேளை வரும் அளவும்
மூன்று மணி நேரமாய்
துணையின்றி மௌனமாய்
காரிருளில் தேவரீர்
பேயோடே போராடினீர்

3   
தெய்வ ஏக மைந்தனார்
அபிஷேக நாதனார்
தேவனே என் தேவனே
எந்தனை ஏன் கைவிட்டீர்
என்றுரைக்கும் வாசகம்
கேள் இருண்ட ரகசியம்

4   
துயர் திகில் இருண்டே
சூழும்போது தாசரை
கைவிடாதபடி நீர்
கைவிடப்பட்டிருந்தீர்
இக்கட்டில் சமீபம் நீர்
என்றிதாலே கற்பிப்பீர் 

துயருற்ற வேந்தரே / Dhuyarutra Vendharae / Thuyarutra Vendharae

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!