என்றென்றும் ஜீவிப்போர் அதரிசனர் / Endrendrum Jeevippor Adharisanar / Endrendrum Jeevippor Atharisanar

என்றென்றும் ஜீவிப்போர் அதரிசனர் / Endrendrum Jeevippor Adharisanar / Endrendrum Jeevippor Atharisanar

1         
என்றென்றும் ஜீவிப்போர் அதரிசனர்
எட்டா ஒளியில் உள்ளோர் சர்வ ஞானர்
மா மேன்மை மகத்துவர் அநாதியோராம்
சர்வவல்லோர் வென்றோர் நாமம் போற்றுவோம்

2        
ஓய்வோ துரிதமோ இன்றி ஒளி போல்
ஒடுங்கா பொன்றா சக்தியோடாள்வதால்
வான் எட்டும் மலைபோல் உம் நீதி நிற்கும்
அன்பு நன்மை பெய்யும் உந்தன் மேகமும்

3        
பேருயிர் சிற்றுயிர் ஜீவன் தேவரீர்
யாவர்க்குள்ளும் உய்வீர் மெய்யாம் ஜீவன் நீர்
மலர் இலைபோல் மலர்வோம் செழிப்போம்
உதிர்வோம் சாவோம் நீரோ மாறாதோராம்

4        
மா மாட்சி பிதா தூய ஜோதி தந்தாய்
தாழுவர் உம் தூதர் மா வணக்கமாய்
துதிப்போம் மகத்தாய்க் காணத் தோற்றுவீர்
கண் கூசும் ஜோதியாம் ஜோதி தேவரீர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!