அருவிகள் ஆயிரமாய் / Aruvigal Aayiramaai / Aruvigal Aayiramai
1
அருவிகள் ஆயிரமாய்
பாய்ந்து இலங்கிடச் செய்வார்
அனைத்தும் ஆள்வோர் தாகமாய்
இருக்கிறேன் என்றார்
2
வெம்போரில் சாவோர் வேதனை
வியாதியஸ்தர் காய்ச்சலும்
குருசில் கூறும் இவ்வொரே
ஓலத்தில் அடங்கும்
3
அகோரமான நோவிலும்
மானிடர் ஆத்துமாக்களை
வாஞ்சிக்கும் தாகம்முக்கியம்
என் ஆன்மாவும் ஒன்றே
4
அந்நா வறட்சி தாகமும்
என்னால் உற்றீர் பேர் அன்பரே
என் ஆன்மா உம்மை முற்றிலும்
வாஞ்சிக்கச் செய்யுமே
அருவிகள் ஆயிரமாய் / Aruvigal Aayiramaai / Aruvigal Aayiramai
