இஸ்திரீயின் வித்தவர்க்கு / Isthireeiyin Viththavarkku / Isthireeiyin Vithavarkku / Isthireeiyin Viththavarku / Isthireeiyin Vithavarku
1
இஸ்திரீயின் வித்தவர்க்கு
ஓசன்னா ஆர்ப்பரிப்போம்
கர்த்தராம் இம்மானுவேலே
ஓசன்னா
2
அதிசயமானவர்க்கு
ஓசன்னா முழக்குவோம்
ஆலோசனைக் கர்த்தாவுக்கு
ஓசன்னா
3
வல்ல ஆண்டவருக்கின்று
ஓசன்னா ஆர்ப்பரிப்போம்
நித்திய பிதாவுக்கென்றும்
ஓசன்னா
4
சாந்த பிரபு ஆண்டவர்க்கு
ஓசன்னா முழக்குவோம்
சாலேம் ராஜா இயேசுவுக்கு
ஓசன்னா
5
விடி வெள்ளி ஈசாய் வேரே
ஓசன்னா ஆர்ப்பரிப்போம்
கன்னிமரி மைந்தருக்கு
ஓசன்னா
6
தாவீதின் குமாரனுக்கு
ஓசன்னா முழக்குவோம்
உன்னதம் முழங்குமெங்கள்
ஓசன்னா
7
அல்பா ஒமேகாவுக்கின்று
ஓசன்னா ஆர்ப்பரிப்போம்
ஆதியந்தமில்லாதோர்க்கு
ஓசன்னா
8
தூதர் தூயர் மாசில்லாத
பாலர் யாரும் பாடிடும்
ஓசன்னாவோடெங்கள் நித்திய
ஓசன்னா
