சீர்திரியேக வஸ்தே நமோ நமோ / Seerthiriyega Vasthe Namo Namo / Sirthiriyeka Vasthe Namo Namo / Seer Thiriyaga Vasthay Namo Namo / Seer Thiree Yega Vasthe Namo Namo

சீர்திரியேக வஸ்தே நமோ நமோ / Seerthiriyega Vasthe Namo Namo / Sirthiriyeka Vasthe Namo Namo / Seer Thiriyaga Vasthay Namo Namo / Seer Thiree Yega Vasthe Namo Namo

சீர்திரியேக வஸ்தே நமோ நமோ நின்
திருவடிக்கு நமஸ்தே நமோ நமோ

பார்படைத்தாளும் நாதா
பரம சற்பிரசாதா
நாருறுந தூயவேதா நமோ நமோ நமோ

1
தந்தைப் பராபரனே நமோ நமோ எமைத்
தாங்கி ஆதரிப்போனே நமோ நமோ
சொந்தக் குமாரன் தந்தாய்
சொல்லரும் நலமீந்தாய்
எந்தவிர் போக்குமெந்தாய் நமோ நமோ நமோ

சீர்திரியேக வஸ்தே நமோ நமோ நின்
திருவடிக்கு நமஸ்தே நமோ நமோ

2
எங்கள் பவத்தினாசா நமோ நமோ புது
எருசலேம் நகர்ராசா நமோ நமோ
எங்கும் நின் அரசேற
எவரும் நின் புகழ்கூற
துங்க மந்தையிற் சேர நமோ நமோ நமோ

சீர்திரியேக வஸ்தே நமோ நமோ நின்
திருவடிக்கு நமஸ்தே நமோ நமோ

3
பரிசுத்த ஆவிதேவா நமோ நமோ திட
பலமளித் தெமைக்காவா நமோ நமோ
கரிசித்துத்தா நற்புத்தி
கபடற்ற மனசுத்தி
திருமொழி பற்றும்பக்தி நமோ நமோ நமோ

சீர்திரியேக வஸ்தே நமோ நமோ நின்
திருவடிக்கு நமஸ்தே நமோ நமோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!