யெகோவா நிசி யெகோவா நிசியை போற்றிப் பாடுவோம் / Yegovaa Nissi Yegovaa Nissiyai Potri Paaduvom / Yehova Nissi Yehova Nissi Yai Potri Paaduvom
யெகோவா நிசி யெகோவா நிசி
யெகோவா நிசி யெகோவா நிசி
யெகோவா நிசி யெகோவா நிசியை
போற்றிப் பாடுவோம்
எங்கள் கொடி வெற்றிக் கொடியே
எங்கள் கொடி வெற்றிக் கொடியே
யெகோவா நிசி யெகோவா நிசி
யெகோவா நிசி யெகோவா நிசி
1
வீறு கொண்டெழுவீர் இயேசு வீரரே
மாறு கொண்டு மன்னர் முன்னே செல்கிறார்
சீறியெழும் சிங்கங்கள் நாம் அல்லவோ
மீறும் எதிரி சதிகளுக்கு மிரளவா
யூத சிங்கம் யுத்த சிங்கமே
யூத சிங்கம் யுத்த சிங்கமே
யெகோவா நிசி யெகோவா நிசி
யெகோவா நிசி யெகோவா நிசி
2
கர்த்தர் துணை நின்று யுத்தம் செய்வாரே
கலங்கி நிற்க காரணங்கள் இல்லையே
கைகளைத் தளர்ந்திடாமல் தாங்கியே
கர்த்தர் இயேசு சத்திய ஆவி நிற்கிறார்
கர்த்தர் வல்ல யுத்த வீரரே
கர்த்தர் வல்ல யுத்த வீரரே
யெகோவா நிசி யெகோவா நிசி
யெகோவா நிசி யெகோவா நிசி
3
நமக்கிருக்கும் இந்த பெலன் போதுமே
நாதன் இயேசு அனுப்புவதால் போவோமே
பட்டயமோ புயபலமோ தேவையா
பரம தேவ ஆவி நம்மில் இல்லையா
ஜீவ தேவ சேனை அல்லவோ
ஜீவ தேவ சேனை அல்லவோ
யெகோவா நிசி யெகோவா நிசி
யெகோவா நிசி யெகோவா நிசி
4
முடிந்தென்று முழங்கி நிற்கும் வீரனே
முற்றும் அவனை முறியடித்த தீரனே
சிலுவையில் சிரம் நசித்த சீலனே
சிலுவைக்கொடியை ஏற்றும் தேவபாலன
வெற்றி வாகை சூற்றிப் பணிகிறோம்
வெற்றி வாகை சூற்றிப் பணிகிறோம்
யெகோவா நிசி யெகோவா நிசி
யெகோவா நிசி யெகோவா நிசி
4
எதிரி வெள்ளம் போல ஏறி வருகின்றான்
இயேசு ராஜா வேகம் கொடியை ஏற்றுவார்
கோலியாத்தின் வேஷமிங்கு செல்லுமா
கோஷமிடும் இளைஞரின் முன் நில்லுமா
கர்த்தர் நாமம் வல்ல நாமம் அல்லேலூயா
கர்த்தர் நாமம் வல்ல நாமம்
யெகோவா நிசி யெகோவா நிசி
யெகோவா நிசி யெகோவா நிசி
யெகோவா நிசி யெகோவா நிசியை
போற்றிப் பாடுவோம்
எங்கள் கொடி வெற்றிக் கொடியே
எங்கள் கொடி வெற்றிக் கொடியே
யெகோவா நிசி யெகோவா நிசி
யெகோவா நிசி யெகோவா நிசி
யெகோவா நிசி யெகோவா நிசியை போற்றிப் பாடுவோம் / Yegovaa Nissi Yegovaa Nissiyai Potri Paaduvom / Yehova Nissi Yehova Nissi Yai Potri Paaduvom | Ezekiah Francis