யாரிலும் மேலான அன்பர் / Yaarilum Melaana Anbar / Yaarilum Melana Anbar

யாரிலும் மேலான அன்பர் / Yaarilum Melaana Anbar / Yaarilum Melana Anbar

1
யாரிலும் மேலான அன்பர்
மா நேசரே
தாயைப் பார்க்க நல்ல நண்பர்
மா நேசரே
மற்ற நேசர் விட்டுப் போவார்
நேசித்தாலுங் கோபங் கொள்வார்
யேசுவோ என்றென்றும் விடார்
மா நேசரே

2        
என்னைத் தேடிச் சுத்தஞ் செய்தார்
மா நேசரே
பற்றிக் கொண்ட என்னை விடார்
மா நேசரே
இன்றும் என்றும் பாதுகாப்பார்
பற்றினோரை மீட்டுக் கொள்வார்
துன்ப நாளில் தேற்றல் செய்வார்
மா நேசரே

3        
நெஞ்சமே நீ த்யானம் பண்ணு
மா நேசரை
என்றுமே விடாமல் எண்ணு
மா நேசரை
எந்தத் துன்பம் வந்தும் நில்லு
நேரே மோட்ச பாதை செல்லு
யேசுவாலே யாவும் வெல்லு
மா நேசரே

4        
என்றென்றைக்கும் கீர்த்தி சொல்வோம்
மா நேசரே
சோர்வுற்றாலும் வீரங்கொள்வோம்
மா நேசரே
கொண்ட நோக்கம் சித்தி செய்வார்
நம்மை அவர் சேர்த்துக் கொள்வார்
மோட்ச நன்மை யாவும் ஈவார்
மா நேசரே

யாரிலும் மேலான அன்பர் / Yaarilum Melaana Anbar / Yaarilum Melana Anbar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!